Vehicle collision near Bhawani: பவானி அருகே வாகனங்கள் மோதி விபத்து

ஈரோடு: Vehicle collision near Bhawani. பவானி அருகே 6 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம், பவானி அருகே சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமி நகர் பகுதியில் மினி வேன் கவிழந்து விபத்துக்குள்ளானது. அப்போது வானகத்தின் பின்னால் வந்த ஆறு வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதில் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.

ஈரோடு மாவட்டம், சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையின் லட்சுமி நகர் சமத்துவபுரம் மேடு பகுதியில் அத்திக்கடவு அவிநாசி திட்டப் பணிகளுக்கு ராட்சத குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக சித்தோடு பகுதியிலிருந்து சிமெண்ட் மூட்டை ஏற்றிக்கொண்டு மினி வேன் வந்துகொண்டிருந்தது. மினி வேனை பவானி காளிங்கராயன்பாளையம் பகுதியை சேர்ந்த ஓட்டுனர் பெருமாள் என்பவர் ஓட்டி வந்தார். அப்போது, வேன் கட்டுப்பாட்டை இழந்து தேசியநெடுச்சாலையின் குறுக்கே கவிழ்ந்தது.

இதனையடுத்து மினி வேனுக்கு பின்னால் சேலம் நோக்கி வந்த 3 கார்கள் மற்றும் இரண்டு தனியார் பேருந்துகள் அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த தனியார் நிறுவன பணியாளர்கள் மற்றும் காரில் பயணம் செய்தவர்கள் என 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்கள் மூலம் சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சித்தோடு போலீசாருக்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சித்தோடு காவல்துறையினர் விபத்துக்குள்ளான வாகனங்களை மீட்டு போக்குவரத்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்..தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிமெண்ட் லோடு ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.‌ இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மினி லோடு வேன் கவிழ்ந்து பின்னால் வந்த ஆறு வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்று மோதி விபத்துக்குள்ளான வாகன விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சித்தோடு பகுதியில் சுமார் ஒரு நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது‌ .