Seizure of 1630grams gold by Chennai Air Customs: சென்னை விமான நிலையத்தில் ரூ.136.92 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல்

சென்னை: Seizure of 1630grams gold of 24K purity worth Rs.71.62 Lakhs by Chennai Air Customs. சென்னை விமான நிலையத்தில் ரூ.136.92 லட்சம் மதிப்பு 3,116 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை சர்வதேச விமான நிலைய முதன்மை சுங்கத்துறை ஆணையர் எம் மேத்யூ ஜாலி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், துபாயில் இருந்து அக்டோபர் 9-ந் தேதி விமானம் மூலம் சென்னை வந்த பயணி ஒருவரை இடைமறித்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டதில், நூதன முறையில் மறைத்து எடுத்துவரப்பட்ட ரூ.30.31 லட்சம் மதிப்பிலான 690 கிராம் தங்கத்தினை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மற்றொரு சம்பவத்தில் அபுதாபியில் இருந்து வந்த பயணி ஒருவரை சோதனையிட்டதில், நூதன முறையில் மறைத்து எடுத்துவரப்பட்ட ரூ.30.09 லட்சம் மதிப்பிலான 685 கிராம் தங்கத்தினை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

குவைத் நாட்டிலிருந்து விமானம் மூலம் அக்டோபர் 7-ம் தேதி வந்த பயணி ஒருவரை சோதனையிட்டதில், 3 கிலோ எடை கொண்ட தங்க ஆபரணங்கள் மற்றும் ஒரு கிலோ எடை கொண்ட தங்க மோதிரங்களை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. ரூ.11.20 லட்சம் மதிப்புள்ள 255 கிராம் எடை கொண்ட தங்கம் கைப்பற்றப்பட்டது.

துபாயில் இருந்து அக்டோபர் 9-ந் தேதி விமானம் மூலம் சென்னை வந்த பயணி, முகமது ஃபஸ்லீம் ஃபலீல் என்பவரை இடைமறித்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பசை வடிவத்தில் மறைத்து எடுத்துவரப்பட்ட ரூ.65.30 லட்சம் மதிப்பிலான 1,486 கிராம் தங்கத்தினை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த நான்கு சம்பவங்களிலிருந்து மொத்தம் ரூ.136.92 லட்சம் மதிப்பிலான 3,116 கிராம் எடை கொண்ட தங்கத்தை பறிமுதல் செய்த விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய முதன்மை சுங்கத்துறை ஆணையர் எம் மேத்யூ ஜாலி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.