Trial Run of Vande Bharat train: சென்னை – மைசூர் இடையே வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்

சென்னை: Vande Bharat train trial run between Chennai – Mysore. சென்னை – மைசூர் இடையே வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் இன்று தொடங்கியது.

நாட்டிலேயே முதன் முறையாக அதிவேகமாக செல்லும் வந்தே பாரத் ரயில், சென்னை ஐசிஎப் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 4 ரயில்கள் பிரதமர் மோடியால் துவக்கிவைக்கப்பட்டுள்ளன. 5வது ரயிலாக சென்னை- மைசூர் இடையே இயக்கப்படுகிறது. இதன் சோதனை ஓட்டம் இன்று தொடங்கியது. இந்த ரயிலலை வரும் 11ம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார்.

பல்வேறு வசதிகளை கொண்ட இந்த ரயில் புதுடெல்லி-வாரணாசி, புது டெல்லி -ஸ்ரீ மாதா வைஸ்னோ தேவி கத்ரா, காந்தி நகர்-மும்பை மற்றும் அம்ப் அந்தாரா – புதுடெல்லி என 4 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இது மணிக்கு 160 கி.மீ வேகத்திலும், அதிகபட்சமாக 180 கி.மீ வேகத்திலும் செல்லக்கூடியது. மேலும் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த ரயில்களில் உள்ளன.

இந்த நிலையில் இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 5-வது வந்தே பாரத் ரயில் சென்னை-பெங்களூரு மற்றும் மைசூர் இடையான சோதனை ஓட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தென்மண்டல ரயில்வே மேலாளர் மல்லையா இந்த சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.

காலை 5.50 மணி அளவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மைசூருக்கு இயக்கப்பட்டது. இந்த சோதனை ஓட்டத்தின்போது சென்னையிலிருந்து 5.50 மணிக்கு புறப்பட்டு, 7.25க்கு காட்பாடி ரயில்நிலையத்தை வந்தடையும், இதனைத்தொடர்ந்து ஜோலார்பேட்டையில் 8.30 மணிக்கும், பெங்களூருவில் 10.25க்கும், மைசூர் ரயில்நிலையத்திற்கு 12.20க்கும் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தின் தொலைவு 483 கி.மீ ஆகும்.

இந்த நிதி ஆண்டுக்குள் 27 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.