Truck collides with bike: பைக் மீது லாரி மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

பெல்லாரி: 3 members of same family killed : வேகமாக வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெல்லாரியைச் சேர்ந்தவர் வீரேஷ். அவரது மனைவி அஞ்சலி. இவர்களது மகன் தினேஷ். இவர்கள் 3 பேர் உள்ளிட்ட 4 பேர் மோட்டார் சைக்கிளில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தனராம். கௌசல் பஜார் மேம்பால சாலையில் சென்று கொண்டிருந்தப்போது, பின்புறத்திலிருந்து வேகமாக வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதி உள்ளது. இதில் பலத்த காயமடைந்த வீரேஷ், அவரது மனைவி அஞ்சலி, மகன் தினேஷ் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காயமைடைந்த வீரேஷின் மற்றொரு மகன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுமதித்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கௌசல் பஜார் பகுதியில் அதிக அளவில் வாகன நெரிசல் ஏற்படுவதால், விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு ஒரு தீர்வை கண்டறிய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

திருட்டு வழக்குகளில் ஒருவர் கைது: ரூ. 11 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல்

அண்மையில் பெங்களூரு விவேக்நகர் காவல் சரகத்தில் (Viveknagar police station) வீடு ஒன்றில் மின்சாரம் இல்லாத போது, வீட்டில் இருந்த ரூ. 12 லட்சம் மதிப்புள்ள தங்கநகை, வெள்ளிப் பொருள்கள், ரொக்கப்பணம் திருட்டு போனது. இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் விவேக்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்துவழக்கு பதிந்த போலீசார், பில்லண்ணா கார்டனைச் சேர்ந்த இஸ்தார் அகமதுவைக் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் பேரில் ரூ. 11 லட்சம் மதிப்புள்ள ரூ. 5.10 லட்சம் ரொக்கப்பணம், 120 கிராம் தங்கநகை, 353 கிராம் வெள்ளிப்பொருள்கள், திருட்டுக்கு பயன்படுத்தி இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், இஸ்தார் அகமதுவிடம் மேலும் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.