Traffic Diversion in Chennai: சென்னையில் நாளை முதல் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்

சென்னை: Traffic Diversion from 01.09.2022 to 04.09.2022, near Hotel Hablis, GST Road, St.Thomas Mount for Permanent Flood restoration work and UG cable laying work. சென்னையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல், போக்குவரத்து தெற்கு மாவட்ட காவல்துறை சார்பில், புனித தோமையார்மலை போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜி.எஸ்.டி சாலை, ஹோட்டல் ஹப்லிஸ் அருகே, புனித தோமையார்மலை நோக்கி வெளிச்செல்லும் சாலையில், நெடுஞ்சாலை துறையினரால் நிரந்தர மழைநீர் வடிகால் அமைக்கும் பணி 01.09.2022 மற்றும் 02.09.2022 (வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற இருக்கிறது.

மேலும் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக 400KV கேபிள் அமைக்கும் பணி 03.09.2022 மற்றும் 04.09.2022 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற இருப்பதாலும், மொத்தம் நான்கு நாட்கள் இரவு 23.00 மணிமுதல் அதிகாலை 05.00 மணி வரை கீழ்கண்ட சாலை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

அண்ணா சாலையிலிருந்து புனித தோமையார்மலை நோக்கி வெளிசெல்லும், வணிக மற்றும் கனரக வாகனங்கள், கிண்டி மேம்பாலத்திலிருந்து (கிண்டி போகும் வழி செல்லாமல்) இடதுபுறமாக உள்ள ரேஸ்கோர்ஸ் (MRC) சாலை திருப்பிவிடப்படும்.

ரேஸ்கோர்ஸ் (MRC) சாலை வழியாக சென்று, மடுவண்கரை மேம்பாலம் அருகே உள்ள, சர்வீஸ் சாலை வழியாக, சிட்டி லிங்க் சாலை சென்று ஆதம்பாக்கம் பேருந்து பணிமனை – மவுண்ட் ரயில்நிலையம் – மேடவாக்கம் மெயின் ரோடு – வலது புறமாக திரும்பி MRTS சாலை – தில்லை கங்கா நகர் சப்வே – சிமிண்ட் ரோடு சந்திப்பு வந்து GST சாலை சென்றடையலாம்.

அனைத்து அவசரகால வாகனங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் விமான நிலையம் செல்லும் வாகனங்கள் எவ்வித தடையும் இல்லாமல் வழக்கம்போல் செல்லும் சாலையில் செல்லலாம்.

சென்னை கிரைம் செய்திகள்:
வேப்பேரி மற்றும் புதுவண்ணாரப்பேட்டை பகுதிகளில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 5 நபர்கள் கைது. 7.7 கிலோ கஞ்சா பறிமுதல்.
நந்தம்பாக்கத்தில், மனைவிடம் தகராறு செய்து கத்தியால் தாக்கிய கணவர் கைது.
சாஸ்திரிநகரில், தகராறு செய்து கத்தியால் தாக்கியவர் கைது.
டி.பி.சத்திரம் பகுதியில் மாவா புகையிலைப்பொருட்களை எடுத்து வந்த 4 நபர்கள் கைது. 21 கிலோ மாவா, 26 கிலோ ஜர்தா பறிமுதல்.
துரைப்பாக்கத்தில், ஒருவரைத் தாக்கி பணத்தை பறித்துச் சென்றவர் கைது.
நீலாங்கரையில், முன்விரோதம் காரணமாக பீர் பாட்டிலால் தாக்கி, கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது.
தலைமைச் செயலக குடியிருப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பெண் கைது. 1.3 கிலோ கஞ்சா பறிமுதல்.
புளியந்தோப்பு பகுதியில், கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது.