Traffic change in Chennai: சென்னையில் 10 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்

சென்னை: Traffic change in Chennai for 10 days: சென்னையில் கோயம்பேடு முதல் வடபழனி வரையிலான 100 அடி சாலையில் 10 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை (Chennai Traffic Police) வௌியிட்டுள்ள அறிவிப்பில், கோயம்பேடு (Koyambedu) முதல் வடபழனி (Vadapalani) வரை 100 அடி சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக உள்ளதால், போக்குவரத்தை மேம்படுத்தும் பொருட்டு, 23.07.2022 முதல் 10 நாட்கள் சோதனை ஓட்டமாக கீழ்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 100 அடி சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக உள்ளதால், போக்குவரத்தை மேம்படுத்தும் பொருட்டு, 23.07.2022 முதல் 10 நாட்கள் சோதனை ஓட்டமாக கீழ்கண்ட மாற்றங்கள் (Traffic Change) செய்யப்பட்டுள்ளது.

கோயம்பேடு முதல் வடபழனி வரை உள்ள விநாயகபுரம் சந்திப்பு, பெரியார் பாதை சந்திப்பு மற்றும் நெற்குன்றம் பாதை சந்திப்பு ஆகிய மூன்று இடங்களில் உள்ள மைய தடுப்புசுவர் (Central Median) மூடப்பட்டு இதற்கு மாற்றாக SAF Game Village சந்திப்பில் ‘U’ திருப்பம் வடபழனி பாலத்தின் கீழ் ‘U’ திருப்பத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரு U’ திருப்பங்கள்:

விநாயகபுரம் சந்திப்பிற்கும், பெரியார்பாதை சந்திப்பிற்கும் இடையே அரும்பாக்கம் மெட்ரோ இரயில்வே நிலையம் (Arumbakkam Metro Railway Station) அருகில் உள்ள தூண் எண்கள் 110 மற்றும் 111 இடையில் உள்ள ‘U’ திருப்பம் உருவாக்கப்பட்டுள்ளது. பெரியார்பாதைக்கும் நெற்குன்றம் பாதைக்கும் இடையில் தூண்கள் எண் 126 மற்றும் 127 அமைந்துள்ள இடையில் ‘U’ திருப்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

வடபழனியில் இருந்து கோயம்பேடு செல்லும் வாகனங்கள் நெற்குன்றம் சந்திப்பில் வலதுபுறம் திருப்பம் செய்ய விரும்புபவர்கள் நேராக சென்று 170 மீட்டர் தூரத்தில் தூண் எண் 126 மற்றும் 127 இடையில் புதியதாக அமைந்துள்ள ‘U’ திருப்பத்தில் திருப்பி செல்லலாம்.

வடபழனியில் இருந்து கோயம்பேடு செல்லும் வழியில் பெரியார்பாதை சந்திப்பில் வலதுபக்கம் செல்லும் வாகனங்கள் கோயம்பேடு திசையில் 238 மீட்டரில் அரும்பாக்கம் மெட்ரோ இரயில்நிலையம் (Arumbakkam Metro Railway Station) அருகில் தூண் எண்கள் 110 மற்றும் 111 இடையில் புதிதாக அமைந்துள்ள ‘U’ திருப்பத்தில் திரும்பிக் கொள்ளலாம். – விநாயகபுரம் சந்திப்பில் MMDA Colony வலது புறம் திரும்பி செல்ல விரும்பும் வாகனங்கள் 496 மீட்டர் தொலைவில் உள்ள SAF Game Village ‘U’ திருப்பத்தில் திரும்பி செல்லலாம்.

இருந்து வடபழனி நோக்கி வரும் வாகனங்கள் விநாயகபுரம் சந்திப்பைதாண்டி 243 மீட்டர் தொலைவில் உள்ள அரும்பாக்கம் மெட்ரோ இரயில்நிலையம் அருகில் உள்ள தூண் எண்கள் 110 மற்றும் 111 இடையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ‘U’ திருப்பத்தில் திரும்பி விநாயகபுரம் நோக்கிச் செல்லலாம். – பெரியார் சந்திப்பு மூடப்படுவதால் பெரியார்பாதை உள் இருந்து வரும் வாகனங்கள் இடது புறம் திரும்பி செல்லவும் மற்றும் கோயம்பேட்டில் இருந்து வரும் வாகனங்கள் பெரியார்பாதைக்கும், நெற்குன்றம் பாதைக்கும் இடையில் 240 மீட்டர் தொலைவில் தூண் எண்கள் 126 மற்றும் 127 இடையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ‘U’ திருப்பத்தில் திரும்பி செல்லலாம். – கோயம்பேட்டில் இருந்து (Koyambedu) வரும் வாகனங்கள் நெற்குன்றம் சந்திப்பில் வலது புறம் திரும்பும் வாகனங்கள் நேராக வடபழனி சர்வீஸ்ரோடு பாலத்தின் கீழ் 199 மீட்டர் தூரம் சென்று ‘U’ திருப்பம் எடுத்து செல்லலாம். – நெற்குன்றம் (Nerkunram) பாதையில் இருந்து வரும் வாகனங்கள் இடது புறம் திரும்பி வடபழனி பாலத்தின் கீழ் உள்ள ‘U’ திருப்பத்தில் திரும்பி செல்லலாம்.

இந்த மாற்றத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு சென்னை போக்குவரத்துக் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.