Today gold rate: தொடர்ந்து குறையும் தங்கம் விலை

தங்கம் விலை அதிரடி குறைவு
தங்கம் விலை அதிரடி குறைவு

Today gold rate: தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் விலை குறைக்கப்பட்டுள்ளது. நீங்கள் நகை வாங்க திட்டமிட்டிருந்தால் இன்னைக்கே வாங்கிவிட்டால் நல்லது. ஏனெனில் தங்கம் விலை நாளை தீடீரென்று உயர்ந்துவிடலாம்.

சென்னையில் இன்று (மே 14) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,737 ஆகக் குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4,755 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 38,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 144 ரூபாய் குறைந்து 37,896 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தூய தங்கத்தின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று 5,154 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் இன்று 5,136 ரூபாயாகக் குறைந்துள்ளது. அதேபோல, நேற்று 41,232 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் 144 ரூபாய் குறைந்து 41,088 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,645 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,645 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,645 ஆகவும், கேரளாவில் ரூ.4,637 ஆகவும், டெல்லியில் ரூ.4,645 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,645 ஆகவும், ஒசூரில் ரூ.4,766 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,766 ஆகவும் இருக்கிறது.

வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.63.20 ஆக இருந்தது. இன்று அது ரூ.63.70 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 63,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: இலங்கை எம்பி அடித்து கொல்லப்பட்டார்- பிரேத பரிசோதனையில் தகவல்