TN Shawarma ban: தமிழகத்தில் ஷவர்மாவுக்கு தடை? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தஞ்சையில் ஷவர்மா சாப்பிட்ட மருத்துவ மாணவர்கள் 3 பேர் மயக்கம்
தஞ்சையில் ஷவர்மா சாப்பிட்ட மருத்துவ மாணவர்கள் 3 பேர் மயக்கம்

TN Shawarma ban: கேரள மாநிலத்தில் ‘ஷவர்மா’ சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள ஷவர்மா விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் ஷவர்மா விவகாரம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மேலைநாட்டு உணவு வகையான ஷவர்மா அந்த நாட்டின் மக்களின் தட்பவெப்ப நிலைக்கு பொருந்தும்; பொதுமக்கள் ஷவர்மா போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.

தமிழகத்தில் ஷவர்மா கடைகளுக்கு தீவிர சோதனை நடத்தப்பட்டு, இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளுக்கு அறிவுரை வழங்கி, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவை போன்று தமிழகத்திலும் ஷவர்மாவுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

ஏற்காடு அரசு மருத்துவமனையில் 1 கோடி 5 லட்சம் மதிப்பீட்டில் புதிய பிரேத பரிசோதனை கூடம் கட்டப்படும். ஏற்காட்டில் கடந்த 8 வருடமாக பிரேத பரிசோதனை கூடம் செயல்படவில்லை; இது கடந்த ஆட்சியில் சுகாதாரத் துறை அலட்சியத்திற்கு ஒரு முன் உதாரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: Crime: குழந்தையை கொன்று தற்கொலை செய்த இளம்பெண்