Tn Cm letter to Minister of External Affairs: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம்

சென்னை: Tamil Nadu Chief Minister’s letter to the Minister of External Affairs. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் 5.11.2022 அன்று கைது செய்யப்பட்டுள்ளது குறித்தும், அவர்களது இரண்டு விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறித்தும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் இன்று (7-11-2022) கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், தமிழ்நாடு அரசு பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும், பாக்ஜல சந்திப்பில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் தடையின்றி தொடர்வதாகவும். இது பாரம்பரிய மீன்பிடிப் பகுதியைச் நம்பியிருக்கும் ஒட்டுமொத்த மீனவ சமூகத்தினரிடையே அச்சத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டுள்ள முதல்வர், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய, தூதரக வழிமுறைகள் வாயிலாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள 100 மீன்பிடிப் படகுகளை விடுவிக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் உதவிடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.