4.56 Crores for Haj pilgrims: ஹஜ் பயணம் மேற்கொண்ட 1649 பயணிகளுக்கு ரூ.4.56 கோடி

சென்னை: 4.56 Crores for 1649 Haj pilgrims: தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொண்ட 1649 பயணிகளுக்கு ரூ.4.56 கோடி மானியம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 10,583 நபர்களுக்கு ரூ.5.43 கோடி செலவில் மிதிவண்டிகள் மற்றும் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொண்ட 1649 பயணிகளுக்கு ரூ.4.56 கோடி மானியம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ். 5 கோடியே 43 இலட்சம் ரூபாய் செலவில் 10,583 உலமாக்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விதமாக 3 உலமாக்களுக்கு மிதிவண்டிகளை முதல்வர் வழங்கினார்.

மேலும், 2022-ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொண்ட 1649 ஹஜ் பயணிகளுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் ஹஜ் மானியத் தொகையாக நபர் ஒருவருக்கு ரூ.27,628/- வீதம். மொத்தம் 4.56 கோடி ரூபாய் வழங்கும் விதமாக, 5 ஹஜ் பயணிகளுக்கு மானியத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான். தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, கூடுதல் தலைமைச் செயலாளர் / தமிழ்நாடு மாநில ஹஜ் குழு செயலாளர் மற்றும் செயல் அலுவலர் முகமது நசிமுத்தின், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, சிறுபான்மையினர் நல இயக்குநர் முனைவர் சீ.சுரேஷ் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம் (Chief Minister’s Letter to External Affairs Minister:):

Chief Minister’s Letter to External Affairs Minister: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகினையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மாண்புமிகு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு தமிழக முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒன்பது மீனவர்கள் 6-8-2022 அன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில், 10-8-2022 அன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கையிலுள்ள திரிகோணமலை கடற்படைத் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்றும் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் இலங்கை அரசு விரைவில் விடுவிக்கத் தேவையான தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.