Tamil Nadu State BJP President Annamalai : ஜிஎஸ்டி விவகாரத்தில் மாநில அரசு மக்களை ஏமாற்றி வருகிறது: மாநில பாஜக தலைவர் அண்ணாமலை

சென்னை: The state government is deceiving people in the matter of GST : ஜிஎஸ்டி விவகாரத்தில் மாநில அரசு மக்களை ஏமாற்றி வருகிறது என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் விற்கப்படும் அனைத்து அரிசிகளுக்கும் மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது போல பிம்பத்தை காண்பிக்க மாநில அரசு முயல்கிறது. ஆனால் பதிவு செய்யப்பட்ட பிராண்டட் நிறுவனங்களின், பேக் செய்யப்பட்ட அரிசிகளுக்கு மட்டுமே 5 சதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் நிறுவனங்கள் தங்களின் டிராட் மார்க்கை திரும்ப ஒப்படைப்பதாக தெரிவித்து வருகின்றனர். அதற்கு மத்திய அரசு ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் அரசு ரூ. 6 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது.

அதே போல மாநில அரசு ரூ. 10 க்கு விற்கப்படும் தயிரின் விலையை ரூ. 12 ஆக உயர்த்தியுள்ளது. இது ஜிஎஸ்டி விவகாரத்தில் மாநில அரசு மக்களை ஏமாற்றி வரும் செயலாகும். ரூ. 10 க்கு 5 சதம் வரி என்றால் ரூ. 10.50 காசுக்கு தயிரை விற்க வேண்டும். ஆனால் கூடுதலாக ரூ. 1.50 ஐ உயர்த்தி விட்டு, தங்கள் மீது எந்த தவறும் இல்லாதது போல, மத்திய அரசை குற்றம் சாட்டி வருகின்றனர் (They are blaming the central government). இதன் மூலம் மாநில மக்களை முட்டாள் ஆக்க மாநில அரசு முயற்சிக்கிறது. ஜிஎஸ்டி வரியை வைத்து மாநில அரசு பணம் சம்பாதிக்க முயற்சிக்கிறது.

மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை விதித்தால், மாநில தயிர் உள்ளிட்ட பொருள்களின் விலையை உயர்த்தி வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது என்று ஒரு தமிழக அமைச்சர் கூறுகிறார். அப்படி என்றால் ரூ. 10 விலை உள்ள தயிருக்கு 50 காசுகள் மட்டுமே விலையை உயர்த்த வேண்டும். அதை விடுத்து, கூடுதலாக ரூ. 1.50 விலையை உயர்த்தி விட்டு, மத்திய அரசை குறை சொல்ல இந்த அரசு முயற்சிக்கிறது. இது போல ஜிஎஸ்டி விவகாரத்தில் தொடர்ந்து மக்களை குழப்ப மாநில அரசு முயற்சிக்கிறது (The state government is constantly trying to confuse people on the issue of GST).

அரசி விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக தமிழகத்தில் உள்ள அரசி ஆலை உரிமையாளர்கள் ஜிஎஸ்டி வரியை குறைப்பது தொடர்பாக ஒரு அறிக்கை அளித்தனர். அதனை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Union Finance Minister Nirmala Sitharaman) தமிழகத்திற்கு வந்தப் போது கொடுத்தேன். அவர் ஜெனரிக் அல்லாத பிராண்டாக இருந்தால், அதற்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு, மக்கள் தங்கள் பிரச்னைகளை எடுத்து கூறினால், அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்கும். ஆனால் பிரச்னை என்னவென்று கூறாமல், மத்திய அரசை தொடர்ந்து குற்றம் சாட்டுவதை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. எனவே ஜிஎஸ்டி வரி விதிப்புக் தொடர்பான விளக்கங்களை மக்களிடத்தில் கொண்டு செல்லும் பணிகளை நான் தொடர்ந்து செய்து வருகிறேன் (I am constantly working to bring the GST taxation information to the people). எனவே மாநில அரசு இந்த விவகாரத்தில் தொடர்ந்து தமிழக மக்களை முட்டாளாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.