NEET student commits suicide: தென்காசியில் நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை

தென்காசி: Tenkasi student commits suicide due to fear of NEET exam. தென்காசி அருகே 3வது முறையாக நீட் தேர்வு எழுதிய மாணவி தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம் அருகே உள்ள குலசேகரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அமல்ராஜ்- வெண்ணியார் தம்பதியரின் மகள் ராஜலட்சுமி (21). இவர் பிளஸ் 2 முடித்துவிட்டு, மருத்துவ படிப்பில் சேர கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதி வருகிறார். ஆனால் இரண்டு முறையும் அவர் தோல்வி அடைந்ததால், மீண்டும் 3வது முறையாக நீட் தேர்வு எழுதியுள்ளார். இதன் முடிவுகள் வரும் 7ம்‌ தேதி வெளியாகிறது.

இதனிடையே நீட் தேர்வுக்கான விடைக்குறிப்புகளும் வெளியிடப்பட்டன. அன்றிலிருந்து ராஜலட்சுமி வருத்தத்துடன் காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வில் மூன்றாவது முறையாக தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம் காரணமாக தென்காசி மாவட்டம் குலசேகரமங்கலத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது குடும்பத்திற்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவி ராஜலட்சுமி ஏற்கனவே இரு முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். இப்போது மூன்றாவது முறை. இந்த முறையும் அவரால் போதிய மதிப்பெண்கள் எடுக்க முடியாது என்றால், கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு எவ்வளவு கடினமானது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

நடப்பாண்டில் சென்னை சூளைமேடு தனுஷ், ஓசூர் முரளிகிருஷ்ணா, அரியலூர் நிஷாந்தி ஆகிய மூவர் ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டனர். ராஜலட்சுமி நான்காவது உயிரிழப்பு. வரும் 7-ஆம் தேதி நீட் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், இனியும் தற்கொலைகள் நிகழாமல் அரசு தடுக்க வேண்டும்.

ஏற்கனவே பல்லாயிரம் முறை நான் கூறியவாறு நீட் விலக்கு தான் மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க ஒரே தீர்வு ஆகும். இதை புரிந்து கொண்டு நீட் சட்டத்திற்கு விலக்கு பெறுவதற்காக நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும்; மத்திய அரசு இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.