Teacher Eligibility Test : அக். 14 இல் ஆசிரியர் தகுதி தேர்வு தொடக்கம்

சென்னை: Teacher Eligibility Test starts in Oct. 14th ஆசியரியர் தகுதித்தேர்வு முதல் தாள் அக். 14 முதல் அக். 20 வரை இரு வேளைகளில் நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் (Teacher Selection Board) வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு : ஆசிரியர் தகுதித்தேர்வு ( முதல் தாள் ) செப். 10 முதல் செப். 15 வரை நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிர்வாகக் காரணங்களால் அந்தத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது . இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு (முதல் தாள்) வரும் அக். 14 முதல் அக். 20 வரை இரு நடத்தப்படவுள்ளது. கணினி வழியில் நடைபெற உள்ள இந்தத் தேர்வுக்காக, பயிற்சித் தேர்வு மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியை மேற்கொள்வதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது .

அனைத்துப் பணி நாடுநர்களும் இதனைப்பயன்படுத்தி மேற்கொள்ளலாம் . தேர்வு கால அட்டவணை, அனுமதிச் சீட்டு வழங்கும் விவரம் அக்டோபர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் எழுதுவதற்கு 2.30 லட்சம் பேரும் (2.30 Lakhs to write the first paper of Teacher Eligibility Test). இரண்டாம் தாள் எழுதுவதற்கு 4.01 லட்சம் பேரும் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தேர்வு மைய விவரங்களுடன் கூடிய அனுமதி அட்டை விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே அனுப்பப்படும்.

தேர்விற்கு விண்ணப்பிப்பது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களை மின்னஞ்சல் வாயிலாக ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பி வைக்கலாம் . வாட்சப் ( whatsapp ) , அஞ்சல் , மற்றும் பிற தகவல் தொடர்புகள் ஆசிரியர் தேர்வு வரரியத்தால் அனுமதிக்கப்படமாட்டாது.

தேர்வு மையம் மாற்றம் தொடர்பாகப் பெறப்படும் கோரிக்கைகள் குறிப்பிட்ட பதவிக்கு விண்ணப்பதாரர் தகுதியானவர் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பது விண்ணப்பதாரரின் பொருப்பாகும்.

கல்வித் தகுதி, சாதிச்சான்றிதழ் , பிறந்த தேதி, பிற சிறப்பு இட ஒதுக்கீடு கோரியதற்கான சான்றிதழ்கள் (Educational qualification, caste certificate, date of birth, other certificates for claiming special reservation) போன்றவற்றை வழங்குவதற்கான பொறுப்பு விண்ணப்பதாரரை மட்டுமே சார்ந்துள்ளது.

இணையவழியில் விண்ணப்பிப்பதாலோ / தேர்வில் பங்கு கொள்வதாலோ விண்ணப்பதாரர் தெரிவு சார்ந்து உரிமை கோர இயலாது.

தேர்வை ரத்து செய்தல் நிருவாக மற்றும பிற காரணங்களுக்காக எந்த நேரத்திலும் தேர்வை தள்ளிவைக்கவோ இரத்து செய்யவோ ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உரிமையுண்டு.

தேர்வு மையங்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் பணி நாடுநர்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் விதமாக நடக்கும் பணிநாடுநர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு சார்ந்த பணிநாடுநர்கள் 5 முதல் 7 ஆண்டுகள் வரை ஆசிரியர் தேர்வு வாரியம் (Teacher Selection Board)நடத்தும் அனைத்துத் தேர்வுகளிலும் கலந்துகொள்ள தடைவிதிக்கப்படும் என்பதோடு மட்டுமல்லாமல் ஆயுட்கால தடையும் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.