தஞ்சை தேர் விபத்து- இறந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்

mk-stalin
மாநில கல்வி கொள்கை குழுவின் முதல் கூட்டம் தொடங்கியது

MK Stalin: தஞ்சை களிமேடு கிராமத்தில் தேர் பவனியின்போது மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் தெரிவிப்பதற்காக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மதுரை சென்றார்.

பின்னர் காரில் திருச்சி சென்ற அவர், டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து பிற்பகலில் புறப்பட்டு தஞ்சை களிமேடு சென்ற அவர், உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையை வழங்கினார்.

முதலமைச்சருடன் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பாலு எம்பி மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: Kajal Aggarwal: சிரஞ்சீவி படத்தில் காஜல் அகர்வால் நீக்கம்