Tamil Nadu Legislative Assembly : தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடக்கம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்தொடர்பான ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தின் அறிக்கை பேரவையில் விவாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது

சென்னை: Tamil Nadu Legislative Assembly session begins today : தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை (அக். 17) தொடங்கி நடைபெற உள்ளது. இந்த கூட்டம் 3 நாள்கள் நடைபெறும் என தெரிகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் (Chennai Chief Secretariat) உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் இந்தக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் மறைவுக்கு பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் இரங்கல் தெரிவிக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது.

பின்னர் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறும் (review committee meeting will be held). இதில் ஆளும் கட்சியான திமுக, முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள்பங்கேற்க உள்ளனர். இதில் கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். கூட்டத் தொடர் சுமார் 3 நாள்களுக்கு நடைபெறும் என தெரிகிறது.

இந்தக் கூட்டத்தொடரில் முக்கிய அலுவல்கள் குறித்த முடிவுகள் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது. குறிப்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் (Late former Chief Minister Jayalalitha) தொடர்பான ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தின் அறிக்கை பேரவையில் விவாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இணைய சூதாட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

கூட்டத்தொடரில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு (Electricity tariff, property tax hike) உள்ளிட்ட விவகாரங்களை பேரவையில் எதிர்க்கட்சிகள் எழுப்புவதற்கு எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதற்கு தக்க பதில் அளிக்க ஆளும்கட்சியினரும் தயாராக உள்ளனர். இதனால் நடைபெற உள்ள சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிக்கு ஓ.பன்னீர் செல்வத்திற்கு பதிலாக ஆர்.பி.உதயகுமாரின் பெயரை (Name of RB Udayakumar instead of O. Panneer Selva for the post of Deputy Leader of Opposition) எடப்பாடி பழனிசாமி சார்பில் பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முடிவுக்கு பிறகு பேரவைக் கூட்டத் தொடரைப் புறக்கணிப்பதா, வேண்டாமா என்பதனை முடிவு செய்ய உள்ளதாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பேரவைத் தலைவரின் முடிவுக்கு கட்டுப்படுவோம் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.