TAHDCO with HCL Graduate Employment Programme: ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு

நாமக்கல்: TAHDCO with HCL Graduate Employment Programme: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியருக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு வழங்குவது தொடர்பாக நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த தகுதியான மாணவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தாட்கோ HCL நிறுவனம் இணைந்து 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணர்க்கர்களின் தகுதிக்கேற்ப ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பட்டயப்படிப்பு வழங்கும் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு HCL நிறுவனத்தில் இணையவழி மூலமாக பயிற்சி வழங்கப்படும். இதற்கு தேவையான மடிக்கணினியை HCL நிறுவனமே வழங்கும். பின்னர் சென்னை , மதுரை, விஜயவாடா, நொய்டா, உள்ளிட்ட நகரங்களில் உள்ள அந்நிறுவனத்தில் நேரடி பயிற்சி அளிக்கப்படும். ஊக்கத்தொகையாக ரூ.10,000 வழங்கப்படும்.

இரண்டாம் வருடத்தில் மாணவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் ராஜஸ்தானில் உள்ள BITS – PILANI பல்கலைக்கழகத்தில் 4 ஆண்டு B.SC பட்டப்படிப்பினை அந்நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே படிக்கலாம்.

அதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள SASTRA பல்கலைக்கழகத்தில், உத்திரபிரதேசத்தில் உள்ள AMITY பல்கலைக்கழகத்தில் அந்நிறுவன வேலை வாய்ப்புடன் 3 வருட B.SC பட்டப்படிப்பு படிக்கலாம். இதற்கு 12-ம் வகுப்பில் இயற்பியல், கணிதம், வணிக கணிதம் பாடத்தில் குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும்.

இதில் தாட்கோவின் பங்களிப்பாக HCL நிறுவனம் நடத்தும் நுழைவுத்தேர்வில் பங்கேற்க பயிற்சி அளிக்கப்படும். இதற்கான கட்டணத்தை தாட்கோ ஏற்கும். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய ரூ.1.18 இலட்சம் கட்டணத்தை தாட்கோ கல்வி கடனாக வழங்கும்.

இத்திட்டம் தொடர்பான விபரங்கள், பதிவு செய்வதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.