Students perform silambam on the occasion of Independence Day: சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சிலம்பம் சுற்றி மாணவர்கள் சாதனை

நாமக்கல்: Students perform silambam on the occasion of Independence Day: நாமக்கல்லில் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சிலம்பம் பயிற்சி பெற்ற 1,000 மாணவ,- மாணவியர் பங்கேற்று, தொடர்ந்து ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றும் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை (75th Independence Day) நிகழாண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி (நாளை) கொண்டாடும் விதமாக, மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது. அதில் ஒரு நிகழ்ச்சியாக அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்றும் நிகழ்ச்சிக்கும் மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

இந்நிலையில், சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது சுட்டுரைப் (Twitter) பக்கத்தில் பதிவிட்டுள்ள‌ பதிவில், நிகழாண்டு நாம் சுதந்திர தினத்தின் 75-வது ஆண்டு விழா நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

அதன் ஒரு நிகழ்ச்சியாக‌ ஆக. 13 முதல் 15ம் தேதி வரை (From 13th to 15th) 3 நாள்கள் அனைவரது வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றுங்கள். இந்த இயக்கம் தேசியக் கொடியுடனான நமது இணைப்பை மேலும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.

75-வது சுதந்திர தினத்தையொட்டி மத்திய அரசு ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ (azadi ka amrit mahotsav) என்ற பெயரில் நடத்த‌ மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. நிகழாண்டு சுதந்திர தினத்தின் 75-வது ஆண்டு என்பதால் இதனை மிகச் சிறப்பாக கொண்டாடுவது என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு உள்ளது.

இந்நிலையில் நாமக்கல்லில், 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, சிலம்பம் பயிற்சி பெற்ற, 1,000 மாணவ,- மாணவியர் பங்கேற்று, தொடர்ந்து ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்ச்சி, மாவட்ட நேரு யுவ கேந்திரா, பாரதமாதா சிலம்பம் பயிற்சி மன்றம் சார்பில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 1,000 மாணவ, மாணவியர் பங்கேற்று சிலம்பம் சுற்றினர். சிலம்ப பயிற்சியாளர்களின் கட்டளைக்கு ஏற்ப பல்வேறு விதமான சிலம்ப ஆட்டங்களை, அவர்கள் வெளிப்படுத்தினர்.

இதனைத்தொடர்ந்து, ஒரு மணி நேரம், இடைவெளியின்றி, பல்வேறு சிலம்பக் கலைகளை, போட்டியாளர்கள் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி சாதனைபுரிந்தனர். போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பாரதமாதா சிலம்பம் பயிற்சி பள்ளித் தலைவர் டாக்டர் எழில்செல்வன், மாவட்ட நேரு யுவ கேந்திரா ஆலோசனைக் குழு உறுப்பினர் தில்லைசிவக்குமார், சிலம்பம் பயிற்சி பள்ளி செயலாளர் கார்த்திகேயன், நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் பால்பாண்டி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.