சென்னை உள்பட 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை உள்பட 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
சென்னை உள்பட 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

TN Weather: தெற்கு அந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

இந்நிலையில், சென்னை, தூத்துக்குடி, நாகை, புதுச்சேரி, கடலூர், காரைக்கால், பாம்பன் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இன்று இரவு அல்லது நாளை புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், முக்கிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மெரினா கடற்கரையில் மணற்சிற்பம்- பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்