Storm warning: தமிழக துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை: Storm warning cage number 1 has been installed in Tamil Nadu ports including Chennai, Cuddalore and Thoothukudi. சென்னை, கடலூர் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட தமிழக துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . மேலும் அடுத்த 4 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ள நிலையில், சென்னை எண்ணூர் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னையை தொடர்ந்து கடலூர், நாகை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதேபோல் பாம்பன், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், துறைமுகங்களிலும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை மறுநாள் (பிப்.1-ம் தேதி) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் தொடர்ந்து ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுளள்து.