severe frost: நீலகிரியை வாட்டி வதைக்கும் உறைபனி

ஊட்டி: நீலகிரி மாவட்டம் உதகையில் ஒரு வாரத்திற்கு (severe frost) பின்னர் மறுபடியும் உறைபனி பொழிவு தொடங்கியுள்ளது. இதனால் ஊட்டியில் கடுமையான குளிர் நிலவுவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகையில் இந்த ஆண்டு சற்று தாமதமாக உறைபனிப்பொழிவு தொடங்கியது. ஜனவரி முதல் தொடர்ந்து கடுமையான உறை பனி பொழிவு காணபட்டது. இதனால் இன்று அதிகாலை ஊட்டியில் காலை நேரத்தில் உறைபனி பொழிவால் பச்சை புல்வெளிகளில் வெள்ளை கம்பளம் விரித்தது.

இந்நிலையில், கடந்த வாரத்தில் இரண்டு நாட்கள் சாரல் மைழ பெய்தது. இதனால் உறைபனி பொழிவு காணப்படவில்லை, சற்று குளிர் மட்டும் இருந்தது. இந்நிலையில், நேற்று காலை மற்றும் மாலை நேரத்தில் கடுங்குளிர் நிலவி வந்த நிலையில் இன்று உறை பனி பொழிவு காணப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.