Senkottai-Mayiladuthurai Train: செங்கோட்டை-மயிலாடுதுறை தினசரி ரயில் போக்குவரத்து தொடக்கம்

செங்கோட்டை: Senkottai-Mayiladuthurai daily train services started. செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறைக்கு தினசரி முன்பதிவில்லாத விரைவு ரயில் 25 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று காலையில் தொடங்கியது.

செங்கோட்டை ரயில் நிலையத்தில் நடந்த தொடக்க விழாவில் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. கொடி அசைத்து ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். நகர்மன்ற தலைவர் ராமலட்சுமி, துணைத்தலைவர் நவநீதகிருஷ்ணன், ரயில் பயணிகள் நலச்சங்க தலைவர் எல்.எம்.முரளி, செயலாளர் கிருஷ்ணன், துணைச்செயலாளர் செந்தில் ஆறுமுகம் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். எஸ்.ஆர்.எம்.யு. சங்க முன்னாள் கிளைத்தலைவர் கல்யாணிபாண்டியன் வரவேற்று பேசினார்.

இதையடுத்து முன்னாள் நகர்மன்ற தலைவரும், வர்த்தக சங்க தலைவருமான எஸ்.எம்.ரஹீம் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் ரயில் பயணிகள் நலச்சங்க மக்கள் தொடர்பு அலுவலர் ராமன், உறுப்பினர் முரளி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த முன்பதிவில்லா விரைவு ரயிலானது செங்கோட்டையில் தினசரி காலை 7 மணிக்கு புறப்பட்டு தென்காசி, கடையநல்லூர், பாம்புகோவில்சந்தை, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர், சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர், கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல்ரோடு, திண்டுக்கல், வையம்பட்டி, மணப்பாறை, திருச்சி, மஞ்சத்திடல், திருவெரும்பூர், பூதலுார், தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், ஆடுதுறை, குத்தாலம், மயிலாடுதுறைக்கு மாலை மணி 5.10-க்கு சென்றடையும்.

மறுமார்க்கத்தில் காலை 11.30 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்படும் ரயிலானது இரவு 8.30 மணிக்கு செங்கோட்டை வந்தடையும். இந்த ரெயிலுக்கு செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறைக்கு ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.