Seizure of 2.845 kgs Gold worth Rs. 1.25 crore: சென்னை விமான நிலையத்தில் ரூ.1.25 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்

சென்னை: Seizure of 2.845 kgs Gold worth Rs. 1.25 crore and assorted electronic goods worth Rs. 14 lakhs by Chennai Air Customs. ரூ.1.25 கோடி மதிப்புள்ள 2,845 கிலோ தங்கம் மற்றும் 14 லட்சம் மதிப்பிலான மின்னணு பொருட்களை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறை ஆணையர் எம்.மேத்யூ ஜாலி வெளியிட்டுள்ள அறிக்கையில், உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், துபாயிலிருந்து வந்த ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சொந்தமான EK-544 என்ற விமானத்தில் சென்னை வந்திறங்கிய மூன்று ஆண் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அவர்களிடம் தனித்தனியாக நடத்தப்பட்ட சோதனையில், மூன்று பேரும் கால்சட்டை பாக்கெட்டுகளில் 240 கிராம் எடையுடைய தங்கக் கட்டிகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவர்களின் உடமைகளை சோதித்தபோது, மூவரும் Apple Airpods Pro-வில் 22 தங்கக் கட்டிகள் வீதம் மொத்தம் 66 தங்கக் கட்டிகள் மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது. மொத்தம் 2,605 எடைக்கொண்ட தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.14 லட்சம் மதிப்பிலான மின்னணு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

சுங்கசட்டம் 1962-ன்கீழ், மூன்று பயணிகளிடமிருந்தும் ரூ.1.25 கோடி மதிப்பிலான 2,485 கிலோ எடையிலான 24 கேரட் தங்கக் கட்டிகளும் மற்றும் ரூ.14 லட்சம் மதிப்புடைய பல்வேறு மின்னணு பொருட்களையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இதுகுறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறை ஆணையர் எம்.மேத்யூ ஜாலி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.