Rs.3.09 Crores worth Gold seized: சென்னை விமான நிலையத்தில் ரூ.3.09 கோடி மதிப்பு 6.5 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: 6.5 Kgs Gold and other assorted electronic goods worth 3.09 Crores seized by Chennai Air Customs: சென்னை விமான நிலையத்தில் ரூ.3.09 கோடி மதிப்பிலான 6.5 கிலோ தங்கம் மற்றும் மின்னணு சாதனப் பொருட்களை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

உளவுத்துறை அளித்த தகவலின்படி, துபாயிலிருந்து கடந்த 3ம் தேதி சென்னை வந்தடைந்த எமிரேட்ஸ் விமானம் (எண் EK546) மற்றும் 4ம் தேதி சென்னை வந்த எமிரேட்ஸ் விமானம் எண் EK542 ஆகிய விமானங்களை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது, சென்னையை சேர்ந்த சையத் மீர்சாவின் மகன் முகமது இப்ராஹிம் மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது ஹனிஃபாவின் மகன் சாதிக் அலி ஆகியோர் பசை வடிவில் மறைத்து வைத்திருந்த தங்கம் மற்றும் கால்சட்டையில் மறைத்து வைத்திருந்த இரண்டு தங்கச் சங்கிலிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த சோதனையின்போது, 1.38 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.98 கிலோ தங்கம் மற்றும் 8.75 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்னணு பொருட்கள் மற்றும் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மற்றொரு சோதனையில், அண்ணா பன்னாட்டு விமான நிலைய வரவேற்புப் பகுதியில் உள்ள ஆண்கள் கழிவறைக்குப் பின்னால் பசை வடிவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 தங்க பொட்டலங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன்படி, 1.63 கோடி ரூபாய் மதிப்பிலான 3.52 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் கே.ஆர்.உதய் பாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.