Coutrallam waterfalls : தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

தென்காசி: Removal of ban on bathing in Coutrallam waterfalls : தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து திங்கள்கிழமை சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. பாறைகள் மற்றும் சிறிய நீர்த்துளிகள் மீது பிரபலமான நீர்வீழ்ச்சிகள் காற்றில் தெளிக்கப்படுகின்றன. குற்றாலத்தின் நீர்வீழ்ச்சிகள் காடு மற்றும் மூலிகைகள் வழியாக செல்வதால் மருத்துவ குணம் கொண்டது (The waterfalls of Courtallam have medicinal properties as they pass through the forest and herbs). குற்றாலம் தென்னிந்தியாவின் ‘ஸ்பா’ என்று அழைக்கப்படுகிறது.

இந்த நிலையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தமிழகத்திலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாகவும், குற்றாலம் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக, அங்குள்ள அருவிகளில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது (Tourists are banned from bathing). 

இதனால் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி குற்றாலத்திற்கு குளிக்க வந்த பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர். திங்கள்கிழமை அதிகாலையில் பேரருவியில் தண்ணீா் வரத்து குறைந்ததைத் தொடா்ந்து குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி (Tourists are allowed to bathe in all the waterfalls of Courtallam)அளிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

தற்போது சபரிமலையில் மண்டல பூஜை நவ. 17 ஆம் தேதி தொடங்க உள்ளதால், தமிழகம் உள்ளிட்ட கோவில்கள், குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் ஐயப்ப பக்தர்களின் வருகையும் அதிகரித்துள்ளது (The arrival of Ayyappa devotees has also increased). இதனிடையே குற்றாலத்தில் குளிக்க தடை நீக்கப்பட்டுள்ளதால், அங்கு வந்த ஐயப்ப பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.