Registration for sweet and savory items prepared for Diwali: தீபாவளிக்கு தயாரிக்கப்படும் இனிப்பு, கார வகைகளுக்கு பதிவுசான்றிதழ் அவசியம்

நாமக்கல்: Registration certificate is required for sweet and savory items prepared for Diwali. தீபாவளி பண்டிகை காலங்களில் தயாரிக்கப்படும் இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு, உணவுப் பாதுகாப்பு சட்ட விதிகளின்படி, உரிமம் அல்லது பதிவுச்சான்றிதழ் பெற்று விற்பனை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா சிங் அறிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை காலம் தொடங்கியுள்ளதால் விதவிதமான இனிப்பு வகைகளை மக்கள் விரும்பி வாங்கி உண்பதும், சொந்த பந்தங்களுக்கு அளிப்பதும் நமது கலாச்சாரமாக விளங்கி வருகிறது.

தீபாவளி பண்டிகை காலங்களில் தற்காலிக உணவு கூடங்கள், திருமண மண்டபங்கள், வீடுகள் மற்றும் சீட்டு நடத்துபவர்கள் ஆர்டரின் பேரில் தயாரிக்கப்படும் இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு, உணவுப் பாதுகாப்பு சட்ட விதிகளின்படி, உரிமம் அல்லது பதிவுச்சான்றிதழ் பெற்று விற்பனை செய்ய வேண்டும்.

இனிப்பு மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பாளர்கள், தரமான கலப்படமில்லாத மூலப்பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து, பாதுகாப்பான உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். First in First Out முறையை பின்பற்ற வேண்டும். அதற்கான பதிவேடுகளை பராமரிக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளையோ உபயோகிக்க கூடாது. தரமான நெய் மற்றும் எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்தக்கூடாது.

ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மறுபடியும் சூடுபடுத்தி உணவு தயாரிக்க பயன்படுத்தக்கூடாது. இதனை RUCO திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட முகவரிடம் வழங்க வேண்டும்.

பண்டிகை கால இனிப்பு வகைகளை பரிசு பேக்கிங் செய்யும் போது, பாலால் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை மற்ற இனிப்பு பொருட்களுடன் பேக்கிங் செய்து விற்பனை செய்யக்கூடாது. சமைப்பதற்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் தூய்மையாக

இருக்க வேண்டும். நீரின் தரத்தினை அறியும் பொருட்டு பகுப்பாய்வு சான்றிதழ் பெற்று வைத்திருக்க வேண்டும்.
பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் சில்லறை இனிப்பு பொருட்களுக்கும், விவரச்சீட்டு இடும் போது அதில், தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவுப் பொருளின் பெயர், தயாரிப்பு (அ) பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதி தேதி, உணவு பாதுகாப்புதுறையின் உரிமம் எண், பேட்ஜ் எண், லாட் எண் சைவ குறியீடு மற்றும் அதில் பயன்படுத்தும் பொருட்களின் விபரம் ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.

உணவுப் பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமிதொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்திடல் வேண்டும். உணவு தயாரிக்கும் பணியாளர்கள் தூய்மையான ஆடைகள் அணிந்து, நகங்களை வெட்டி சுத்தமாக இருக்க வேண்டும். தன் சுத்தம் பேண வேண்டும். மேலும், பணியாளர்கள் தலைகவசம், மேலங்கி மற்றும் கையுறை அணிய வேண்டும். பணியினை தொடரும் முன்பும், கழிவறை பயன்படுத்திய பின்பும் சோப்பு கொண்டு கைகளை சுத்தம் செய்தல் வேண்டும். உணவு பொருட்களை கையாள்பவர்கள் உடற்தகுதி குறித்த மருத்துவ சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.

பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையார்களும் உடனடியாக https://foscos.fssai.gov.in என்ற இணைய தளத்தில் விண்ண ப்பித்து, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு செய்து உரிமம் அல்லது பதிவு பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும், உணவு தயாரிப்பாளர்கள் அனைவரும் FosTaC பயிற்சியினை பெற்றிருக்க வேண்டும்.

பொதுமக்களும், பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும் போது, உணவு பாதுகாப்பு துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்குமாறும், பேக்கிங் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சில்லறை உணவு பொருட்களுக்கும் விவரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி உபயோகிக்கு மாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கை கழுவுதல் போன்ற தேவையான வசதிகளை ஏற்படுத்துதல் வேண்டும் மற்றும் அகச்சிவப்பு காய்ச்சல் கண்டறியும் கருவி கொண்டு சோதனை செய்தல் வேண்டும்.

கொரானா தொற்று காரணமாக சமூக இடைவெளியை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், தடை செய்யப்பட்ட நெகிழி (பிளாஸ்டிக்) பைகள், டம்ளர்கள் பயன்படுத்தக்கூடாது என்றும் நெகிழி பைகளில் சூடான பொருட்களை பார்சல் செய்து தரக்கூடாது மற்றும் செய்திதாள்களில் உணவு பொருட்களை வைத்து விற்பனை செய்யக்கூடாது எனவும் கடுமையாக எச்சரிக்கப்படுகிறது.

உணவு பாதுகாப்புதுறை சார்பாக இதுவரை 238 Kgs பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூபாய் ஒரு இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் உணவுப் பொருட்கள் சம்மந்தமாக 94440 42322 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி வாயிலாகவோ அல்லது வாய்மொழியாகவோ புகார் தெரிவிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.