Minister Aswath Narayana : பெங்களூரில் மழை பாதிப்பு: சீரமைக்க விரைவான நடவடிக்கை, அமைச்சர் அஸ்வத் நாராயணா

பெங்களூரு: Quick action to repair Rain damage in Bengaluru : பெங்களூரில் மழை பாதிப்புபை சீரமைக்க விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வி, தகவல், உயிரி தொழில்நுட்பத்துறை அமைச்சர் சி.என். அஸ்வத் நாராயணா தெரிவித்தார்.

கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் இல்லாத மழை இந்த முறை பெய்து வருகிறது (Rains are falling this time which have not been seen in the last fifty years). அதனால் பலரும் பல்வேறு பிரச்சனைகளை எதிர் கொண்டுள்ளனர். இவற்றைத் தீர்க்க அரசு குறிப்பிட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என்று அமைச்சர் டாக்டர் சி.என்.அஸ்வத்த நாராயணா தெரிவித்தார்.

தொழிலதிபர் மோகன் தாஸ் பையின் (Businessman Mohandas Pai) விரக்தி குறித்தும், பெங்களூரில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன என்பது குறித்தும், ஐடி நிறுவனங்களின் அமைப்பு தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக‌ செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்,

உலகின் அனைத்து முக்கிய நகரங்களிலும் இது போன்ற‌ பிரச்சனைகள் உள்ளன (All major cities of the world have similar problems). இவற்றை தொழில் முனைவோர் கவனித்து கூறியதில் எந்த தவறும் இல்லை அவர்களின் கோரிக்கை குறித்து உரிய கவனம் செலுத்துவோம் என உறுதியளித்தார்.

ஆனால் பெங்களூரை விட்டு வெளியேறுவோம் என ஐடி நிறுவனங்கள் மிரட்டியது சரியல்ல. ஹைதராபாத் நகரம் ஒரு மாதத்திற்கு முன்பு இதேபோன்ற மழையால் வெள்ளத்தில் மூழ்கியது (Hyderabad city was inundated by similar rains a month ago). அங்குள்ள சாலைகள் முழுவதும் கார்கள் மிதந்து கொண்டிருந்தன. இது தொழிலதிபர்களுக்கும் தெரியும் என்று விளக்கினார்.

பெங்களூரில் உள்ள அனைத்து ஏரிகளும் தற்போது நிரம்பியுள்ளன (All the lakes in Bangalore are now full). அவற்றின் தண்ணீர் வெளியேற சரியான அமைப்பு இல்லை. அறிவியல் முறைப்படி மழை வெள்ளம் தேங்காமல் வெளியேற தேவையான கட்டாமைப்புகள் உருவாக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.