Pramod Muthalik : குங்குமம், காவி நிறத்தைப் பார்த்தால் வெறுக்கும் சித்தராமையா, வாக்குக்காக‌ மடத்துக்குச் செல்கிறார்: பிரமோத் முத்தாலிக்

Muthalik expressed anger : சித்தராமையாவிற்கு குங்குமம், காவி உடை அணிந்தால் பிடிக்காது. எனினும் வாக்குகளை கவருவத‌ற்காக மடங்களுக்கு செல்கிறார் என்று ஸ்ரீ ராமசேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் கூறினார்.

தார்வாட்: Pramod Muthalik : எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையாவின் வாகனத்தின் மீது முட்டை வீசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சாவர்க்கரின் புகைப்படத்தை எரித்ததற்கு தார்வாட்டில் பதிலளித்த ஸ்ரீ ராம சேனா தலைவர் பிரமோத் முத்தலிக், சாவர்க்கரின் உருவப்படத்தை எரித்தது கேவலமான செயல் என்று கூறினார். இதுவும் தேசத்துரோகச் செயலாகும். நீங்கள் உருவப்படத்தை மட்டும் எரிக்கவில்லை. பாரத அன்னையை எரித்துள்ளீர்கள் என்று ஆவேசம் தெரிவித்தார்.

சாவர்க்கர் தனது வாழ்நாளில் பாதியை சிறையில் கழித்தார் Savarkar spent half of his life in prison). அவரது புகைப்படத்தை எரிப்பதில் தேசபக்தி இல்லை என்பதனை காட்டுகிறது. காங்கிரஸ் கட்சியினருக்கு சித்தராமையா மட்டுமே தேவை. சித்தராமையாவின் வாகனம் மீது முட்டை வீசியது தவறு என அனைவரும் கூறி, வருத்தம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் நீங்கள் சாவர்க்கரை இழிவுபடுத்தியது சரியல்ல. நீங்கள் அனைவரும் அரசியலுக்கு தகுதியற்றவர்கள்.. சமூகத்தில், மதிப்பற்றவர்கள். நீங்கள் அனைவரும் தவறு செய்துவிட்டீர்கள். உடனடியாக பாரத அன்னையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கடுமையாக சாடினார்.

சாவர்க்கரை தேசபக்தர் என்று அழைத்தவர் இந்திரா காந்தி (Indira Gandhi who called Savarkar a patriot). சாவர்க்கரின் உருவப்படத்துடன் கூடிய தபால்தலையை வெளியிட்டார். ஆனால் நீங்கள் அதையெல்லாம் மறந்துவிட்டு தவறு செய்கிறீர்கள். உடனடியாக மன்னிப்பு கேட்கவில்லை என்றால் காங்கிரஸ் தலைவர் வீட்டின் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்துவோம் என எச்சரித்தார்.

மேலும் சித்தராமையா ரம்பாபுரி சுவாமிகளை (Ramapuri Swamy) சந்தித்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அவர், சித்தராமையா தற்போது அனைத்து மடங்களுக்கும் சென்று, சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி நாடகம் ஆடுகிறார். இது ரம்பாபுரி சுவாமிகளுக்கும், சிருங்கேரி மடத்தின் சுவாமிகளும் அறிவார்கள். இந்த அரசியல்வாதிகளின் நாடகம் அனைத்து மடாதிபதிகளுக்கும் தெரியும். சித்தராமையாவிற்கு குங்குமம், காவி உடை அணிந்தால் பிடிக்காது. எனினும் வாக்கு வங்கிக்காக மடங்களுக்கு விஜயம் செய்கின்றார். சித்தராமையாவின் உண்மை முகத்தை அனைவரும் அறிவார்கள். இந்த முறை வாக்காளர்கள் உங்களுக்கு வாக்களிக்காமல் புறக்கணிப்பார்கள் என்றார் அவர்.

அண்மையில் குடகு மாவட்டத்தில் வெள்ள சேதங்களை பார்வையிட எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா அங்கு சென்றிருந்தார். அவரது வாகனம் மீது பாஜக இளைஞர் அணியினர் முட்டையை வீசினர் (BJP youth team threw eggs). இதனை முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட அனைவரும் கண்டித்தனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் சித்தராமையா காரின் மீது முட்டை வீசியதைக் கண்டித்து கர்நாடக மாநிலம் தழுவிய அளவில் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தியது. இதில், தார்வாட் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சுதந்திரப் போராட்ட வீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கர், உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா ஆகியோரின் புகைப்படத்தை மிதித்து, முட்டை வீசி, பின்னர் எரித்தனர். இது மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாவர்க்கர் புகைப்படத்தை அவமானப்படுத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி பாஜகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.