Popular Front of India protest in Tenkasi: தென்காசியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆர்ப்பாட்டம்; போலீசார் குவிப்பு

தென்காசி: Popular Front of India protest against NIA Raid in Tenkasi. தென்காசியில் தேசிய புலனாய்வு முகமையின் சோதனையை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக முழுவதும் நேற்று கோவை, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பல இடங்களில் தேசிய புலனாய்வு முகமையினர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகத்திலும் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம், பண்பொழி கிராமத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் முகமது அலி ஜின்னா வீட்டில் இன்று காலை தேசிய புலனாய்வு முகமையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

இந்தநிலையில் திடீரெனப் அப்பகுதியில் உள்ள பாப்புல பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சுமார் 25க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு விரைந்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட போவதாக தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து பெரிய பள்ளிவாசல் பகுதியில் இன்று காலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் 60-க்கும் மேற்பட்டோர், சோதனையை கண்டித்து கோஷங்கள் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் ஏ.கே.அமின் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் திப்பு சுல்தான் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.