Petrol price cut in 17 districts of Karnataka : கர்நாடகத்தில் 17 மாவட்டங்களில் பெட்ரோல் விலை குறைப்பு

மாநிலத்தில் இன்று பெட்ரோல்-டீசல் விலையில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிப்போ அல்லது குறைப்போ இல்லை. பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை சாலையில் இறக்குவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். எரிபொருள் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ள‌தால், நாடு முழுவதும் எரிபொருள் விலை கணிசமாகக் குறைந்துள்ளது மற்றும் நிலையான விலையில், பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும், சிறிய வேறுபாடுகள் இருப்பது இயல்பானவை .சர்வதேச சந்தையில் கூட, கச்சா எண்ணெய் விலை, முந்தைய நிலைக்கு வராமல் தொடர்ந்து, அதன் விலை ஏற்ற இறக்கத்தை கண்டும் வருவது தொடர்கிறது. இந்த நிலையில் கர்நாடகத்தின் ஒரு சில மாவட்டங்களில் பெட்ரோல் விலை (Petrol price cut in 17 districts of Karnataka) குறைக்கப்பட்டுள்ளது அம்மாவட்ட மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடி வருவதால், அது பெரும்பாலும் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் சாமானியர்களை விலை உயர்வு தொடர்ந்து பாதிப்பு வருகிறது. ஒருபுறம், உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே இருக்கிறது. மறுபுறம், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான மோதல் முடிவுக்கு வருவதற்கான அறிகுறி எதுவும் காணப்படவில்லை. இருப்பினும் கர்நாடகத்தில் ஒரு சில மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் விலை ஞாயிற்றுக்கிழமை (Petrol price cut in 17 districts of Karnataka) குறைக்கப்பட்டது.

கர்நாடகத்தின் தலைநகர் பெங்களூரில் இன்றைய பெட்ரோல் விலை ரூ. 101.94, டீசல் விலை ரூ. 87.89 ஆகும். சென்னை, மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற பெரும் நகரங்களில் இன்றைய பெட்ரோல் விலை முறையே ரூ.102.63, ரூ. 106.31, ரூ. 106.03, டீசல் விலை ரூ. 94.24 ரூ. 92.76, ரூ. 94.27 ஆகும். நாட்டின் தலைநகர் தில்லியில் இன்றைய பெட்ரோல் விலை ரூ. 96.72 ஆகவும், டீசல் விலை ரூ. 89.62 ஆகும்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மாவட்டங்களில் இன்றைய பெட்ரோல் விலை

பாகல்கோட் – ரூ. 102.50 (0.36 பைசா உயர்வு)

பெங்களூரு – ரூ. 101.94 (00)

பெங்களூர் ஊரகம் – ரூ. 101.58 (0.43 பைசா குறைந்தது)

பெல்காம் – ரூ. 101.97 (73 பைசா குறைந்தது)

பெல்லாரி – ரூ. 103.90 (0.17 பைசா உயர்வு)

பீத‌ர் – ரூ. 102.52 (0.75 பைசா குறைந்தது)

விஜயபூரா- ரூ. 102.12 (0.04 பைசா குறைந்தது)

சாம்ராஜநகர் – ரூ. 102.07 (0.41 பைசா குறைந்தது)

சிக்கபள்ளாப்பூர் – ரூ. 102.39 (0.34 பைசா உயர்வு)

சிக்மகளூர் – ரூ. 103.70 (0.07 பைசா குறைந்தது)

சித்ரதுர்கா – ரூ. 103.20 (0.68 பைசா குறைந்தது)

தென்கன்னடம் – ரூ. 101.13 (0.21 பைசா குறைந்தது)

தாவணகெரே – ரூ. 104.13 (0.82 பைசா உயர்வு)

தார்வாட் – ரூ. 102.41 (00)

கத‌க் – ரூ. 103.38 (00)

கலபுர்கி – ரூ. 101.64 (0.04 பைசா குறைந்தது)

ஹாசன் – ரூ. 103.13 (0.01 பைசா குறைந்தது)

ஹாவேரி – ரூ. 101.78 (0.12 பைசா குறைந்தது)

குடகு – ரூ. 103.38 (00)

கோலார் – ரூ. 101.92 (0.14 பைசா உயர்வு)

கொப்பல் – ரூ. 103.14 (01 பைசா உயர்வு)

மண்டியா – ரூ. 101.32 (12 பைசா உயர்வு)

மைசூரு – ரூ. 101.92 (14 பைசா உயர்வு)

ராய்ச்சூர் – ரூ. 102.29 (14 பைசா குறைந்தது)

ராம்நகர் – ரூ. 102.25 (0.15 பைசா குறைந்தது)

ஷிமோகா – ரூ. 103.49 (0.01 வரை)

தும்கூர் – ரூ. 102.36 (0.41 பைசா குறைந்தது)

உடுப்பி – ரூ. 101.48 (0.11 பைசா உயர்வு)

வட கன்னடம் – ரூ. 102.37 (0.96 பைசா குறைந்தது)

யாதகிரி – ரூ. 102.43 (01 பைசா உயர்வு).