முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் பேரறிவாளன்

perarivalan
முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் பேரறிவாளன்

Perarivalan case: சென்னை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பேரறிவாளன், அற்புதம்மாள் மற்றும் அவருடைய குடும்பத்தினர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பையொட்டி பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் ஏற்கெனவே தமிழக அரசு மற்றும் முதல்வருக்கு நன்றி தெரிவித்திருந்தனர். இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து பேரறிவாளன், அவரது தாயார் அற்புதம்மாள், தந்தை குயில்தாசன் மற்றும் உறவினர்கள் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க சென்னை வந்துள்ளனர்.

ஏற்கெனவே முதல்வர் ஸ்டாலின் பேரறிவாளன் மற்றும் அற்புதம்மாளிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியிருந்தார். தமிழக அரசு பேரறிவாளனுக்கு பரோல் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பேரறிவாளன் மற்றும் அவரது உறவினர்கள் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 5G services: இந்தியாவின் முதல் 5ஜி ஆய்வுக் களம் துவக்கம்