Penalty for garbage on the road: காஞ்சிபுரத்தில் சாலையில் குப்பைகளை வீசினால் அபராதம்

காஞ்சிபுரம்: Penalty for garbage on the road in Kancheepuram. காஞ்சிபுரத்தில் சாலைகளில் குப்பைகளை வீசினால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 51 வார்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஏராளமான வணிக நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. மாநகர் பகுதிகளிலிருந்து நாள்தோறும் சுமார் 70 டன் குப்பைகள் சேகரிக்கப்படுறது.

இந்த குப்பைகளில், 20 டன் பிளாஸ்டிக் கழிவுகளாக உள்ளதாக கூறப்படுகிறது. குதிருக்காலிமேடு பகுதியில் நத்தப்பேட்டை ஏரிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள குப்பை கிடங்கில் ப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து கொட்டப்படுகிறது.

மாநகராட்சியில் உள்ள குப்பைகளை சேகரிக்க நாள்தோறும் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் சுழற்சி முறையில் காலை மற்றும் இரவு என இரு வேலைகளில் பணிகள் மேற்கொண்டு தூய்மை உருவாக்கும் நோக்கில் மேயர் ஆலோசனையுடன் மாநகராட்சி ஆணையர் கண்ணன் இணைந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

தற்போது காஞ்சிபுரம் புறநகர் பகுதிகளில் பெரும் வளர்ச்சி கொண்டு வரும் நிலையில், வணிக வளாகங்கள் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. முதற்கட்டமாக குடியிருப்பு பகுதிகளில் அருகில் உள்ள குப்பை தொட்டிகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றிவிட்டு, அங்கு மா கோலமிட்டு , வீடுகள் தோறும் பணியாளர்கள் நேரில் சென்று தரம் பிரித்த குப்பைகளை சேகரித்து வருகின்றனர்.

மேலும் வணிக வளாகங்களில் சேரும் குப்பைகளை சாலையில் வீசி வருவதை தடுக்கும் வகையில் வரும் திங்கட்கிழமை முதல் வணிக வளாகங்களில் நுழைவு வாயில் அருகே குப்பைகளை சேகரித்து தரம் பிரித்து வைத்திருக்க வேண்டும் எனவும் , தூய்மை பணியாளர்கள் நேரில் சென்று அவற்றை பெற்றுக் கொள்வார்கள் எனவும், இதை மீறும் வணிக வளாகங்களுக்கு வரும் திங்கட்கிழமை முதல் அபராதம் விதிக்கப்படும் என அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு வழிகாட்டு முறைகளை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சாலைகளில் குப்பைகள் வீசூம் நடவடிக்கை குறைத்துக் கொண்டு வணிக வளாகங்கள் மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு தந்து சிறந்த ஒரு மாநகராட்சியாக காஞ்சிபுரம் நீடிக்க உதவ வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.