Pearl Millet Porridge Recipe: உடலுக்கு குளிர்ச்சியான கம்பு – கேழ்வரகு கூழ்

கம்பு - கேழ்வரகு கூழ்
கம்பு - கேழ்வரகு கூழ்

Pearl Millet Porridge Recipe: தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு – ஒரு கப்,

கம்பு மாவு – அரை கப்,
அரிசி நொய் – அரை கப்,
நறுக்கிய சின்ன வெங்காயம் – ஒரு கப்,
கடைந்த தயிர் – அரை கப்,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

கேழ்வரகு மாவில் 3 கப் தண்ணீர் விட்டு முதல் நாளே கரைத்து புளிக்கவிடவும்.

மறுநாள் கம்பு மாவை ஒரு கப் நீர் விட்டு உடனடியாக கரைத்துக்கொள்ளவும்.

அரை கப் அரிசி நொய்யில் ஒரு கப் நீர் விட்டு வேகவிடவும்.

வெந்ததும் புளிக்க வைத்த கேழ்வரகு மாவு, கரைத்த கம்பு மாவு, உப்பு சேர்த்து கட்டித் தட்டாதவாறு கைவிடாமல் கிளறவும்.

வெந்ததும் இறக்கி, கடைந்த தயிர் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்துப் பரிமாறவும்.

உடலுக்கு குளிர்ச்சியான கம்பு – கேழ்வரகு கூழ் ரெடி.

இதையும் படிங்க: Sathuragiri Hills: சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி