Palavekadu Lake People Protest: மீன்பிடி தொழில் பாதிக்கப்படுவதாக 12 கிராம மக்கள் சாலை மறியல்

திருவள்ளூர்: பழவேற்காடு ஏரியில் கடந்த நான்கு (Palavekadu Lake People Protest) நாட்களுக்கு முன்னர் கோட்டைக்குப்பம் ஊராட்சியில் அடங்கிய நடுவூர் மாதாகுப்பம் மீனவர்களுக்கும் கூணங்குப்பம் மீனவர்களுக்கும் இடையில் மீன்பிடிப்பது பற்றிய தகராறு ஏற்பட்டது.

இது மிகப்பெரிய சண்டையாக மாறியது. இதில் நடுவூர் மாதா குப்பத்தை சேர்ந்த 7 மீனவர்கள் படுகாயமடைந்தனர். ஏரியில் மீனவர்களை தாக்கிய கூணங்குப்பம் மீனவர்களை கைது செய்யக்கோரி இரண்டு நாட்களுக்கு முன்பு மீனவ பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர்.

மேலும் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. கல்யாண், பொன்னேரி உதவி ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கூணங்குப்பத்தை சேர்ந்த 13 பேரை கைது செய்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பழவேற்காடு ஏரியில மீன்பிடி தொழில் செய்யும் கோட்டைக்குப்பம், நடுவூர் மாதாகுப்பம் உட்பட 12 கிராமத்தை சேர்ந்த மக்கள் பழவேற்காடு பஜாரில் ஒன்று கூடினர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு சாலை மறியல் செய்ததால் போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.