Palani Murugan Temple Kumbabhishekam: 16 ஆண்டுக்கு பின் நடைபெறும் பழனி கும்பாபிஷேகம்: திண்டுக்கல் மாவட்டத்திற்கு 27ல் விடுமுறை

பழனி: திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோயிலில் (Palani Murugan Temple Kumbabhishekam) வருகின்ற 27ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையும் திருக்கோயில் நிர்வாகமும் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இந்நிலையில், முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடாக போற்றப்படும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் 2023 ஜனவரி 27ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.

இதற்கு முன்னர் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில் தற்போது வருகின்ற 27ம் தேதி பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகின்ற 27ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.