Pramod Muthalik: பாஜகவை நம்புவதில் பிரயோஜன‌மில்லை, இந்துக்கள் இனி வாளை வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்: முத்தாலிக்கின் சர்ச்சைக்குரிய அறிக்கை

சிர்சி: Pramod Muthalik: மாநிலத்தில் இந்துக்கள் மீதான தொடர் கொலைவெறி தாக்குதல்கள் நடை பெற்று வருகின்றன. இதற்கு மாநிலத்தை ஆளும் பாஜகவை பொறுப்பாக்க வேண்டி உள்ளது. ஷிமோக்கா ஹர்ஷா கொலை வழக்கு, தென் கன்னடாவில் பிரவீன் நெட்டாரு கொல்லப்பட்டதை அடுத்து, தற்போது ஷிமோக்காவில் இரண்டு பேர் மீண்டும் கத்தியால் குத்தப்பட்டுள்ளனர். அவர்களின் பாதுகாப்பு குறித்து மாநில மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். வட‌ கன்னடா மாவட்டம் சிர்சியில் ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக், மாநிலத்தில் நிலவும் பதற்றமான சம்பவங்களுக்கு மத்தியில் இனிமேல் இந்துக்கள் தங்கள் வீடுகளில் வாளை வைத்திருக்க வேண்டும் என்று சர்ச்சைக்குரிய‌ அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இந்துக்கள் க்ஷத்திரிய குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் (Hindus should develop Kshatriya qualities). அவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக வாளை வீட்டில் வைத்திருக்க வேண்டும். இனி பாஜகவை நம்பி எந்த பயனும் இல்லை. இந்து அமைப்புகள் ஒன்றுபட வேண்டும். பாஜக அரசின் கடுமையான நடவடிக்கை எடுப்பதாக கூறும் வார்த்தைகளை மக்கள் நம்பத் தயாராக இல்லை.

ஹிந்து சமுதாயத்திற்காக போராடும் என்னை போன்றவர்களுக்கு மாநிலத்தில் 21 மாவட்டங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக, பாஜக ஆட்சியில் இருக்கும் கோவாவில் நுழைய எனக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் துரோகிகளை, தேசபக்தர்கள் என்று சமாதானப்படுத்துகிறார்கள். அதனால்தான் இந்து விரோதியான திப்பு சுல்தானை காங்கிரஸார் புகழ்ந்து பேசுகிறார்கள் (Congress praise Tipu Sultan). வீர் சாவர்க்கரை இழிவுபடுத்திய முஸ்லீம் குண்டர்களை கண்டுபிடித்து சுட்டுக்கொல்ல வேண்டும் என்று ஆவேசத்தை வெளிப்படுத்தினர்.

முன்னதாக ஷிமோக்காவில் வீர் சாவர்க்கர் ஃப்ளெக்ஸ் விவகாரத்தால், ஷிவமொக்கா போராட்டக்களமாக மாறியுள்ளது. ஷிமோக்காவில் கடந்த மூன்று நாட்களாக சாவர்க்கர் புகைப்பட விவகாரம் பெரிதாகி வந்த நிலையில் இன்று இரு இளைஞர்கள் கத்தியால் குத்தப்பட்டுள்ளனர். வீர சாவர்க்கர் ஃபிளக்ஸ்களை அகற்றி திப்பு சுல்தானின் புகைப்படத்தை வைக்க முயன்ற‌ முஸ்லீம் இளைஞர்களுக்கும், இந்து ஆர்வலர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் இன்று விஸ்வரூபம் எடுத்து, நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர்.

ஷிமோக்காவில் நடந்த வன்முறைக்கு கடும் அதிருப்தி தெரிவித்த ஸ்ரீராம சேனா (Sri Rama Sena) தலைவர் பிரமோத் முத்தாலிக், ஷிமோக்காவில் திப்பு சுல்தானின் புகைப்படத்தை வைத்து அமைதியை சீர்குலைக்கும் முயற்சி நடந்ததாக கூறினார். திப்பு சுல்தான் ஒரு மதவெறியர். ஆயிரக்கணக்கான கோவில்களை அழித்தார். லட்சக்கணக்கான இந்துக்களை கொன்றார். அவர் கன்னட விரோதி. சுதந்திரத்தின் சுதந்திர தின விழாவில் அப்படிப்பட்டவரின் புகைப்படத்தை பயன்படுத்துவது சரியா என கேள்வி எழுப்பினார்.

சாவர்க்கர் புகைப்படம் தொடர்பாக முன்பு ஷிமோக்காவில் மோதல் ஏற்பட்டது. சாவர்க்கர் ஒரு உண்மையான தேசபக்தர் (Savarkar was a true patriot). ஆனால் அப்படிப்பட்டவரின் புகைப்படத்தை சுதந்திர போராட்ட வீரர்கள் வரிசையில் இருந்து நீக்கும் கேவலமான செயலை செய்துள்ளனர். அப்படி செய்தவரை பிடித்து உடனடியாக கைது செய்திருக்க வேண்டும். ஆனால் எதுவும் செய்யப்படவில்லை. அதனால் எனக்கு அரசாங்கத்தின் மீது வெறுப்பு இருக்கிறது. சாவர்க்கர் புகைப்படத்தை எடுக்கும்போதே நடவடிக்கை எடுத்திருந்தால், இப்படி ஒரு கலவரச் சூழல் ஏற்பட்டிருக்காது. இது போன்றவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க‌ வேண்டும். இல்லாவிட்டால் இந்து அமைப்புகள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்த நேரிடும் என எச்சரித்துள்ளார்.