New Traffic fine: போக்குவரத்து விதிமீறல்களுக்கான புதிய அபராத தொகை இன்று முதல் அமல்

சென்னை: New Traffic fine Amount will be charged, from Today. புதிய விதிமுறைகளின்படி போக்குவரத்து விதிமீறல்களுக்கான புதிய அபராத தொகை இன்று முதல் (26.10.2022) அமலாகிறது.

கடந்த 2019ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டதிருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன் படி போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கான அபராத தொகை மாற்றி அமைக்கப்பட்டது. அதன் படி புதிய அபராத தொகையை வசூலிக்க தமிழக அரசு 19.10.2022 அன்று அரசாணை வெளியிட்டது. அதன் படி சென்னை பெருநகர காவல் துறையால் புதிய அபராத தொகை வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது,

இந்நிலையில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அதிகரிக்கப்பட்ட அபராத தொகையினை சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை, கணினி சேவையகத்தில் (Updation of Server) மேம்படுத்தப்பட்டுள்ளதால். சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மீறும் குற்றத்திற்காக மோட்டார் வாகன சட்டத்தின்படி புதிய அபராத தொகை இன்று (26.10.2022) முதல் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையில் புதிய விதிமுறைகளின்படி அமல்படுத்தப்படும் என்பது தெரிவித்து கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடித்து ஒத்துழைப்பு நல்குமாறு சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சென்னை கிரைம் செய்திகள்:

சென்னையில் தீபாவளியன்று உச்ச நீதிமன்றம் வரையறுத்த விதிகள் மீறியதாக மொத்தம் 354 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமைந்தகரை பகுதியில் பட்டாசு கடை உரிமையாளரை தாக்கி பணம் மற்றும் செல்போன் பறித்த வழக்கில் 3 பேர் கைது.

மீன்பிடி துறைமுகம் பகுதியில் இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்த வழக்கில் சுனில் என்பவர் கைது.

எஸ்பிளனேடு பகுதியில் பெண்ணை காதலிக்க சொல்லி வற்புறுத்தி தாக்கிய சரித்திரப்பதிவேடு குற்றவாளி எஸ்பிளனேடு காவல் குழுவினரால் கைது.

வியாசர்பாடி பகுதியில் வீண்தகராறு செய்து ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய வழக்கில் 2 சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் உட்பட 5 பேர் கைது.