Necessary stock of medicines and tablets in Tamil Nadu:தமிழகத்தில் மருந்து, மாத்திரைகள் தேவையான அளவு கையிருப்பு: மா.சுப்பிரமணியன்

சேலம்: Necessary stock of medicines and tablets in Tamil Nadu. சேலம் மாவட்ட மருந்து கிடங்கில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு மருத்துவ பணிகள் சேவை கழக மாவட்ட மருந்துக் கிடங்கில் மருந்து மாத்திரைகளின் இருப்பு குறித்து செய்தியாளர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தொடர் மழை பெய்து வரும் இச்சூழலில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான நோய் தடுப்பு நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் தேவையான அளவு மருந்து, மாத்திரைகள் கையிருப்பில் உள்ளது. மேலும், அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறேன். அந்த வகையில் இன்றைய தினம் சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு மருத்துவ பணிகள் சேவை கழக மாவட்ட மருந்துக் கிடங்கில் மருந்து, மாத்திரைகளின் இருப்பு குறித்து செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் 9 வட்டார மருத்துவமனைகள், 2 வட்டாரம் அல்லாத மருத்துவமனைகள், 23 மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 64 கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 20 நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 107 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றது. இங்கு சிகிச்சைக்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான அளவிற்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு மருத்துவர்களால் சிறப்பான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் ஏற்கனவே தமிழ்நாடு மருத்துவ பணிகள் சேவை கழகத்தின் 32 மருந்து கிடங்குகள் அமைந்துள்ளன. இதில் ஒன்று இங்குள்ள சேலம் மாவட்ட மருந்து கிடங்கு. இது 44 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான கட்டடமாகும். இதன் நோக்கமே மாவட்ட மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை தேவைகேற்ப இருப்பு வைத்து வழங்குவதாகும். தற்பொழுது இங்கு 600க்கும் மேற்பட்ட மருந்து, மாத்திரைகள் 4 மாதத்திற்கு தேவையான அளவு இருப்பில் உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த நிதிநிலை அறிக்கையில் இதுவரை மருந்து கிடங்குகள் அமையபெறாத மாவட்டங்களான தென்காசி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய 5 இடங்களில் புதிய மருந்து கிடங்குகள் கட்டப்படும் என அறிவித்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் தற்பொழுது ரூ.30 கோடி மதிப்பீட்டில் புதிதாக மருந்து கிடங்குகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மருந்து, மாத்திரைகள் தொடர்பான புகார்களை 104 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் எனவும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மனித உயிரை காக்கின்ற உன்னதப் பொறுப்பினை ஏற்றிருக்கும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தொடர்ச்சியாக பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க பொதுமக்களின் தேவையை அறிந்து அதற்கேற்ப தரமான மருத்துவச் சேவை வழங்கப்பட்டு வருகின்றது என அமைச்சர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம், சேலம் மாநகராட்சி மேயர் ஆ.இராமச்சந்திரன் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.வள்ளி சத்தியமூர்த்தி, இணை இயக்குநர் (நலப் பணிகள்) மரு.நெடுமாறன், துணை இயக்குநர்கள் (சுகாதாரப் பணிகள்) மரு.ஜெமினி, மரு.நளினி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.