Mookirattai keerai Soup: சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கும் மூக்கிரட்டை கீரை சூப்

Mookirattai keerai Soup
மூக்கிரட்டை கீரை சூப்

Mookirattai keerai Soup: கல்லீரல் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் கழிவுகளை வெளியேற்றும் சக்தி மூக்கிரட்டை கீரையில் உள்ளது. சிறுநீரகங்களில் கற்கள் உருவாவது, சிறுநீரக தொற்று நோய்கள் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணமாக மூக்கிரட்டை கீரை விளங்குகிறது.

கல்லீரல் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் கழிவுகளை வெளியேற்றும் சக்தி மூக்கிரட்டை கீரையில் உள்ளது. சிறுநீரகங்களில் கற்கள் உருவாவது, சிறுநீரக தொற்று நோய்கள் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணமாக மூக்கிரட்டை கீரை விளங்குகிறது.

தேவையான பொருட்கள்:

மூக்கிரட்டை கீரை – 2 கையளவு

வெங்காயம் – 1
தக்காளி – 1
பூண்டு – 2 பல்
மஞ்சள் தூள் – சிறிதளவு
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மூக்கிரட்டை கீரையை நன்றாக சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு 2 டம்ளர் நீரை அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பிக்கும் போது, வெங்காயம், தக்காளி, கீரையை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

கீரை நன்கு வெந்ததும், அதில் சீரகப் பொடி, தட்டிய பூண்டு, மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

நன்றாக கொதித்த பிறகு அதனை இறக்கி வடிகட்டி பருக வேண்டும்.

சூப்பரான மூக்கிரட்டை கீரை சூப் ரெடி.

மூக்கிரட்டை கீரை கிடைக்காதவர்கள் மூக்கிரட்டை கீரை பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதை வாங்கியும் பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க: Air pollution: காற்று மாசு காரணமாக ஆண்டுக்கு 90 லட்சம் மக்கள் உயிரிழப்பு