Moderate rain in Tamil Nadu: தமிழகத்தில் அடுத்த 5 தினங்களுக்கு மிதமான மழை

சென்னை: Moderate rain in Tamil Nadu for the next 5 days. தமிழகத்தில் அடுத்த 5 தினங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 01.12.2022 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
கீரனுர் (புதுக்கோட்டை) 6, வீரபாண்டி (தேனீ) 4, பவானிசாகர் (ஈரோடு), ஆண்டிபட்டி (தேனீ) தலா 3, அரண்மனைப்புதூர் (தேனீ), கள்ளக்குடி(திருச்சிராப்பள்ளி), சத்தியமங்கலம் (ஈரோடு), படலுர் (பெரம்பலூர்), அதிராம்பட்டிணம் (தஞ்சாவூர்), போடிநாய்க்கனுர் (தேனீ), இலுப்பூர் (புதுக்கோட்டை) தலா 2, செட்டிகுளம் (பெரம்பலூர்), நீடாமங்கலம் (திருவாரூர்), மணல்மேடு (மயிலாடுதுறை), கள்ளக்குறிச்சி, திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), பர்லியார் (நீலகிரி), பரங்கிப்பேட்டை (கடலூர்), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), ஓமலூர் (சேலம்), ஆலங்குடி (புதுக்கோட்டை), துறையூர் (திருச்சிராப்பள்ளி), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), மதுக்கூர் (தஞ்சாவூர்), மணமேல்குடி (புதுக்கோட்டை), அரிமலம் (புதுக்கோட்டை), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), உசிலம்பட்டி (மதுரை), சிதம்பரம் (கடலூர்), எரையூர் (பெரம்பலூர்) தலா 1.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.