Mangaluru Blast not an accident: மர்ம பொருள் வெடிப்பு தற்செயலானது அல்ல; பயங்கரவாத செயல்: கர்நாடக டிஜிபி

மங்களூரு: Blast not an accident, but an act of terror: Karnataka DGP confirms facts of Mangaluru auto explosion. மங்களூருவில் ஆட்டோவில் மர்ம பொருள் வெடிப்பு சம்பவம் தற்செயலானது அல்ல என கர்நாடக டிஜிபி தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம், மங்களூரு நகரின் கங்கனடி டவுன் காவல் நிலைய எல்லைக்கு அருகே சென்றுகொண்டிருந்த ஆட்டோவில் நேற்று தீடிரென வெடித்து சிதறியது. இதனால் சாலையின் நடுவே பயங்கர புகைமூட்டம் நிலவியது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் உட்பட இருவர் காயம் அடைந்துள்ளனர். இந்த மர்மப்பொருள் வெடிப்பு சம்பவம் மாலை 5.15 மணியளவில் அரங்கேறியது.

ஆட்டோவில் பயணி ஒருவர் வைத்திருந்த பையில் தீப்பிடித்ததாகவும், பயணி மற்றும் ஓட்டுனர் தீக்காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்திற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. தடய அறிவியல் ஆய்வகம் (எஃப்எஸ்எல்) குழுவுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்டையில் சரியான காரணங்கள் வெளிச்சத்திற்கு வர வாய்ப்புள்ளது. மேலம் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் எனவும், வதந்திகளுக்கு நம்ப வேண்டாம் எனவும் மாநகர போலீஸ் கமிஷனர் தெரிவித்திருந்தார்.

இதனிடையே இந்த வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த பயணி மற்றும் ஆட்டோ டிரைவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது ஆபத்தான நிலையில் உள்ளனர். சம்பவ இடத்தில் எப்.எஸ்.எல் விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில், பயங்கரவாதச் செயல் என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு தற்செயலானது அல்ல, ஆனால் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ‘பயங்கரவாதச் செயல்’. கர்நாடக மாநில காவல்துறை, மத்திய அமைப்புகளுடன் இணைந்து இது குறித்து ஆழமாக விசாரணை நடத்தி வருகிறது என கர்நாடக டிஜிபி தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மாநில போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர். இது பயங்கரவாதம் தொடர்பான சம்பவமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மாநில காவல்துறையுடன், மத்திய புலனாய்வுக் குழுக்களும் கைகோர்க்கும் என உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.

மங்களூரில் ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் இருவர் பலத்த காயமடைந்த நிலையில், அதன் எதிரொலியாக சென்னையில் நேற்று இரவு முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.