Lizard in lunch: ஈரோடு அருகே பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட 29 மாணவ, மாணவிகளுக்கு சிகிச்சை

ஈரோடு: 29 students of a government school near Anthiyur have been admitted to hospital after eating their lunch after a lizard fell on them. அந்தியூர் அருகே அரசுப் பள்ளியில் பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட 29 மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அத்தாணியை அடுத்த கரட்டூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இன்று மதிய உணவு சாப்பிட்டுள்ளனர். இந்நிலையில், பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பிய ஒரு சில மாணவ, மாணவியருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால், பெற்றோர் தங்களின் குழந்தைகளை அத்தாணி கருவல்வாடிபுதூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில், மதியம் சாப்பிட்ட சத்துணவில் பல்லி கிடந்ததாக கூறப்படுகிறது. இத்தகவல் பரவிய நிலையில் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 40-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றோர், கருவல்வாடிபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சை அழைத்து சென்னர்.

இதைத் தொடர்ந்து அந்தியூர் அரசு மருத்துவமனையில் 29 மாணவ, மாணவியர் நேற்று இரவு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுவலி, மயக்கம் ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இத்தகவலறிந்த அந்தியூர் சட்டப் பேரவை உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து விசாரித்ததோடு, குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். பள்ளி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.