Launched Montra Electric Autos: மோன்ட்ரா மின் ஆட்டோக்களை முதல்வர் தொடங்கி வைப்பு

சென்னை: The Chief Minister of Tamil Nadu today launched the Montra Electric Autos of TI Clean Mobility. டிஐ கிளீன் மொபிலிட்டி நிறுவனத்தின் மோன்ட்ரா மின் ஆட்டோக்களை தமிழக முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முருகப்பா குழுமத்தை சார்ந்த “டி.ஐ. க்ளீன் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் (TI Clean Mobility Pvt Ltd) நிறுவனம் “மோன்ட்ரா ” (Montra) எனும் வணிகப் பெயரில் தயாரித்து விற்பனை செய்யவுள்ள 3 சக்கர மின் ஆட்டோக்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் (TII), நூறு ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் பழம் பெரும் நிறுவனமான முருகப்பா குழுமத்தின் ஒரு அங்கமாகும். இந்தியாவிலேயே, சைக்கிள் உற்பத்தியில் இந்நிறுவனம் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது. முருகப்பா குழுமத்தின் மற்றுமொரு நிறுவனமான, TI Clean Mobility Private Limited, பயணிகளுக்கான மின் ஆட்டோக்கள், மின் சரக்கு வாகனங்கள் மற்றும் E-Rick போன்ற சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத மின் வாகனங்களைத் தயாரிக்க திட்டமிட்டு, TI குழுமம், அம்பத்தூரில் உள்ள தனது TI Cycles வளாகத்தில், 140 கோடி ரூபாய் முதலீட்டில், 580 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், மூன்று சக்கர மின் வாகனங்கள் உற்பத்தி செய்வதற்காக, 20.7.2021 அன்று தொழில் துறை சார்பில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி (GUIDANCE) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

அதன் அடிப்படையில், TI Clean Mobility Pvt. Ltd., நிறுவனத்தின் சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத மோன்ட்ரா (Montra) எனும் வணிகப்பெயரிடப்பட்ட மூன்று சக்கர மின் வாகனங்கள் உற்பத்தியை மேற்கொண்டுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட ஒரு வருட காலத்திலேயே. இந்த உற்பத்தித் திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின் போது, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச. கிருஷ்ண ன், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் பூஜா குல்கர்னி, டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் அருண் முருகப்பன், TI Clean Mobility Pvt. Ltd., நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கல்யாண் குமார் பால், வணிகத் தலைவர் சூசன் ஜனா ஆகியோர் உடனிருந்தனர்.