Lalbagh Flower show : லால்பாக் மலர் கண்காட்சி வரலாற்று சாதனை : ஒரே நாளில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டனர்

10 நாள்கள் நடைபெற்ற‌ மலர் கண்காட்சியில் ஏராளமான செடி மற்றும் மலர் ஆர்வலர்கள் கலந்து கொண்டு கலைத்திறனை பாராட்டி அங்கிருந்த நடிகர் புனித் ராஜ்குமார் உருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பெங்களூரு: (Lalbagh Flower show Historic Record) பாரம்பரிய நிகழ்வுகளில் ஒன்றான லால்பாக் மலர் கண்காட்சி திங்கள்கிழமை நிறைவடைந்தது. இந்த 10 நாள் மலர் கண்காட்சியில் ஏராளமான செடி மற்றும் மலர் ஆர்வலர்கள் கலந்து கொண்டு கலைத்திறனை பாராட்டி அங்கு அமைக்கப்பட்ட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். 10 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கட்டண வசூலிலும் புதிய சாதனையை படைத்துள்ளது.

ஆம், கடந்த 10 நாட்களாக மாநகரில் பெரும் ஈர்ப்பாக இருந்த மலர் கண்காட்சி நிறைவடைந்தது. 212 வது லால்பாக்கில் நடைபெற்ற மலர்க்கண்காட்சியில் (Flower show held at Lalbagh), அண்மையில் மறைந்த கன்னட பவர் ஸ்டாரான, பெரிய வீட்டு பையனான‌ புனித் ராஜ்குமாரின் உருவம் அமைக்கப்பட்டது. இது மட்டுமல்லாமல் டாக்டர் நடிகர் ராஜ் குமார் பிறந்து வளர்ந்த காஜனூர் குடியிருப்பு, மீண்டும் உருவாக்கப்பட்டது.

புனித் மறைந்து 10 மாதங்கள் ஆகியும் புனித் மீதான மக்களின் அன்பு, அபிமானம் கொஞ்சம் கூட குறையவில்லை. அந்தவகையில் இந்த ஆண்டு தோட்டக்கலைத் துறையின் மலர் கண்காட்சி வரலாற்றிலேயே அதிக மக்கள் பார்வையிட்ட மலர் கண்காட்சி என்ற புதிய சாதனையை படைத்துள்ளது. லால்பாக்கில் நடைபெற்ற மலர் கண்காட்சியில் மொத்தம் 8,34,552 பார்வையாளர்கள் லால்பாக்கிற்கு வருகை புரிந்துள்ளனர், இதுவரை லால்பாக் டிக்கெட் விற்பனை (ticket sales) மூலம் ரூ.3,31,90,430 வசூலித்து சாதனை படைத்துள்ளது.

குறிப்பாக விடுமுறை தினமான கடைசி நாள் மற்றும் சுதந்திர தினத்தில் ஒரே நாளில் 2,99,176 சுற்றுலாப் பயணிகள் மலர் கண்காட்சியை கண்டுகளித்தனர். இதுமட்டுமின்றி, 90,50,790 ரூபாய் கட்டணம் மூலம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இது மலர் கண்காட்சியில் அதிக வசூல் மற்றும் புதிய சாதனையாக கருத்த‌ப்படுகிறது. ஆகஸ்ட் 5 ஆம் தேதியன்று புனித் சமாதியில் இருந்து புனித ஜோதியை ஊர்வலமாக கொண்டு வந்து மலர் கண்காட்சியை முதல்வர் பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார். அன்றிலிருந்து ஆக. 15 ஆம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெற்றது. லட்சக்கணக்கான புனித் ரசிகர்கள் மலர் கண்காட்சியை பார்வையிட்டனர், மேலும் பல ரசிகர்கள் மலர் கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த புனித் ராஜ்குமாரின் உருவச் சிலையை பார்த்து கண்ணீர் வடித்தனர் (They shed tears seeing the statue of Puneeth Rajkumar).