L.Murugan saluted by hoisting the national flag: தேசியக்கொடியை ஏற்றி வைத்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மரியாதை

புதுடெல்லி: L.Murugan saluted by hoisting the national flag: மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தனது இல்லத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

நாட்டின் 76வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அனைத்து இல்லங்களிலும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதை ஏற்று அரசு, தனியார் நிறுவனங்கள், பொதுமக்கள் தங்கள் அலுவலகம் மற்றும் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்றி தங்களது தேசப்பற்றினை வெளிப்படுத்தினர். சுதந்திர தினமான இன்று பிரதமர் நரேந்திரமோடி, செங்கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் தங்களது இல்லங்களில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தனர். இதேபோன்று மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் புதுதில்லியில் உள்ள தனது இல்லத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ’பட்டொளி வீசி பறக்கும் நம் பாரதத்தின் தேசியக் கொடியை எனது இல்லத்தில் ஏற்றி வந்தே மாதரம் என முழங்கி நம் தாய் மண்ணிற்கும், சுதந்திர தியாகிகளுக்கும் மரியாதை செலுத்தினேன். ஜெய்ஹிந்த்!! என பதிவிட்டுள்ளார்.

சென்னை துறைமுகத்தில் சுதந்திர தின விழா:

சென்னை துறைமுகத்தில் சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. தண்டையார் பேட்டையில் உள்ள சென்னை துறைமுக வீட்டுவசதி காலனியில் உள்ள பாபு ஜெகஜீவன் ராம் மைதானத்தில், துறைமுக பொறுப்பு கழக தலைவர் சுனில் பானிவால் தேசிய கொடியை ஏற்றிவைத்து, அணிவகுப்பு மரியாதை ஏற்று, உரையாற்றினார்.

பின்னர் அவர் உரையாற்றுகையில், துறைமுகத்தின் எதிர்கால திட்டங்கள், சாதனைகள், ஊழியர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் ஆகியவை குறித்து விளக்கினார். கப்பல் போக்குவரத்துத்துறை துறைமுகத்தின் முன்னேற்றத்திற்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

விடுதலையின் அமிர்தப் பெருவிழாவையொட்டி ஓராண்டு காலமாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அவர் பரிசுகளை வழங்கினார். இந்தப் புனிதமான தினத்தில் துறைமுகத்தின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபடுவோம் என்ற உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் துறைமுக துணைத் தலைவர் எஸ். பாலாஜி அருண்குமார், தலைமை கண்காணிப்பு அதிகாரி எஸ் முரளி கிருஷ்ணன் உள்ளிட்டோர் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டனர்.

மீனம்பாக்கம் விமான சரக்கக வளாகத்தில் சுதந்திர தின விழா

சென்னை விமான நிலைய சுங்கத்துறை சார்பில், மீனம்பாக்கத்தில் உள்ள விமான சரக்கக வளாகத்தில் 76வது சுதந்திர தின விழா இன்று(10.08.2022) சிறப்பாக கொண்டாடப்பட்டது. சுங்கத்துறையின் முதன்மை ஆணையர் கே ஆர் உதயபாஸ்கர் தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் அணிவகுப்பு மரியாதையையும், முதன்மை ஆணையர் ஏற்றுக்கொண்டார்.
பின்னர் சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடையே உரையாற்றிய உதயபாஸ்கார், வர்த்தகத்தை ஊக்குவிக்கவும், வர்த்தகம் மேற்கொள்வதை எளிதாக்குதல், வரிவிதிப்பில் வெளிப்படைத்தன்மையை பின்பற்றுவதன் மூலம் வரி செலுத்துவதை அதிகரித்து நாட்டின் முன்னேற்றகரமாக வளர்ச்சிக்கு பங்களிப்பது குறித்து விவரித்தார்.