KSP Constable Recruitment 2022 : கர்நாடக மாநில காவல் துறை; 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

கர்நாடக மாநில காவல்துறை (KSP Constable Recruitment 2022) ஆயுதம் ஏந்திய காவலர் பதவிக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் KSP.karnataka.gov.in என்ற கர்நாடக மாநில காவல்துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் ஆட்சேர்ப்புத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

கர்நாடக மாநில காவல் துறை (KSP Constable Recruitment 2022) ஆயுதமேந்திய காவலர் பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆண் மற்றும் திருநங்கைகள் இந்தப் பணிக்கு தகுதியானவர்கள். மொத்தம் 3484 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. செப்டம்பர் 19, 2022 முதல், கர்நாடக மாநில காவல்துறை ஆட்சேர்ப்பு அதிகாரப்பூர்வ இணையதளம் ksp.karnataka.gov.in மூலம் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் 31, 2022. விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த நவம்பர் 3, 2022 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

காலி பணியிடங்களின் விவரம்:
ஆயுதமேந்திய போலீஸ் கான்ஸ்டபிள் (CAR/DAR) – மொத்தம் 3484 பதவிகள்

தகுதி:
SSLC/ 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கான்ஸ்டபிள் பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

வயது எல்லை :
கான்ஸ்டபிள் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 25 ஆண்டுகள். SC, ST, OBC (2A, 2B, 3A, 3B) க்கு அதிகபட்ச வயது வரம்பு 27 ஆண்டுகள். கர்நாடகாவில் பட்டியல் பழங்குடியினருக்கு (ST) அதிகபட்ச வயது வரம்பு 30 ஆண்டுகள்.

முக்கியமான தேதி:
ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி செப்டம்பர் 19, 2022
ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 31, 2022

எப்படி விண்ணப்பிப்பது?

முதலில் கர்நாடக மாநில காவல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ksp.karnataka.gov.in அல்லது https://ksp-recruitment.in ஐப் பார்வையிடவும்.
இப்போது விண்ணப்பிக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
சரியான தகவலுடன் விண்ணப்பத்தை நிரப்பவும்.
பூர்த்தி செய்த பிறகு பிரிண்ட்அவுட் எடுக்கவும்.
மேலும் தகவலுக்கு கர்நாடக மாநில காவல் துறை ஆட்சேர்ப்பு அறிவிப்பைப் பதிவிறக்கவும்.