Kashi Tamil Sangamam: ‘காசி தமிழ் சங்கமம்’ கலாசார நிகழ்வில் பங்கேற்க ஆன்லைன் பதிவு

சென்னை: IIT Madras and Banaras Hindu University are the knowledge partners for ‘Kashi Tamil Sangamam’. ஐஐடி மெட்ராஸ், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆகியவற்றின் அறிவுசார் பங்களிப்புடன் ‘காசி தமிழ் சங்கமம்’ நடைபெறுகிறது.

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ரொஸ்), பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்திய அரசின் ‘காசி தமிழ் சங்கமம்’ என்ற முன்முயற்சிக்கு அறிவுசார் ஒத்துழைப்பை வழங்க உள்ளது. தமிழ்நாட்டுக்கும், வாரணாசி என்று அழைக்கப்படும் காசிக்கும் இடையில் உள்ள ஆழமான கல்வி, பொருளாதார, சமூக மற்றும் கலாசாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவருவது இதன் நோக்கமாகும்.

இந்த சங்கமம் நிகழ்ச்சி நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. மாதம் முழுவதும் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்காக, தமிழ்நாட்டின் 12 இடங்களில் இருந்து கலை, இலக்கியம், ஆன்மீகம், கல்வி உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்களை காசிக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த விருந்தினர்கள் சென்னை, கோயம்புத்தூர், ராமேஸ்வரம் ஆகிய ஊர்களில் இருந்து 12 பல்வேறு தேதிகளில் புறப்படும் ரயில்களில் இணைக்கப்பட்ட சிறப்புப் பெட்டிகளில் பல்வேறு குழுக்களாக காசிக்குப் புறப்படுவார்கள். ஒவ்வொரு குழுவினரும் புறப்பட்டுத் திரும்பிவர மொத்தம் 8 நாட்கள் ஆகும். இந்தப் பயணத் திட்டத்தின்படி, விருந்தினர்கள் அனைவரும் காசி, அயோத்தி மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள இடங்களைப் பார்வையிடுவதுடன், கங்கை ஆற்றில் படகு சவாரியும் செய்வார்கள். விருந்தினர்கள் அனைவருக்கும் பயணச் செலவு இலவசம். அத்துடன் காசி மற்றும் அயோத்தியில் தங்குமிட வசதியும் இலவசமாக வழங்கப்படும்.

விருப்பமுள்ள நபர்கள் https://kashitamil.iitm.ac.in/ வலைதளத்தில் உடனடியாக தங்கள் பெயர்கலளப் பதிவு செய்து கொள்ளலாம். இதுபற்றிய மேலும் விவரங்கள் வலைதளத்தில் இடம்பெற்றுள்ளன.