Karnataka: சிகமக்களூருக்கு ஒரு நாள் சுற்றுப்பயணமாக வந்த மாநில மருத்துவ உயர்கல்வி துறை அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டில் சிக்கமகளூர் பாலேஹான்னூரில் உள்ள ரம்பாபுரி மடத்திற்கு சென்று மடாதிபதி இடம் ஆசீர்வாதம் பெற்றார் பின்னர் சிக்கமகளூர் சந்திர திருக்கோண மலையில் உள்ள பாபாபுடன் கரிக்கு சென்றார்

பின்னர் கத்ரி மிதரியில் 550 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரி செயல்பாடுகள் குறித்து பார்வையிடுவதற்காக வந்தார் முன்னதாக மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மரக்கன்று நட்டார் பின்னர் அங்கிருந்து அவர் அருகே புதியதாக மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும் பிரசவ மருத்துவமனை புதியதாக கட்டிக் கொண்டிருப்பதை சென்று பார்வையிட்டார் அங்கு இன்ஜினியர்கள் மற்றும் மருத்துவர்கள் ஒன்று சேர்ந்து அங்கு கட்டப்படுவது குறித்து விளக்கம் அளித்தனர்
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளிக்கியில் கட்டிட வேலைப்பாடுகளை தரமாக செய்யவும் மற்றும் மருத்துவக் கல்லூரி 98 சதவீதம் வேலைகள் முடிந்துள்ள நிலையில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை 75% பிரசவ மருத்துவமனை 75% வேலை முடிந்த நிலையில் விரைவில் அந்த வேலைகள் விரைவில் முடியும் எனவும் தெரிவித்தார்

இதை அடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் முதலமைச்சர் டெல்லி சென்றது குறித்து ஆட்சியில் மாற்றம் ஏற்படுமா என கேட்டதற்கு அப்படி ஒன்றும் கிடையாது கடந்த சில தினங்களாக முதல் அமைச்சர்களுடன் மத்திய தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அழைத்திருந்தனர் அது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சென்று அவர்கள் ஜாதி கணக்கீடு குறித்து மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர் பின்னர் மந்திரி சபையில் மாற்றம் ஏற்படுமா என கேட்டதற்கு அப்படி ஒன்றும் கிடையாது மந்திரி சபை மாற்றம் செய்வதற்கு ஒன்றும் இல்லை எனவும் நன்றாக செயல்பட்டுக் கொண்டிருப்பது அனைத்து துறையிலும் நல்ல வளர்ச்சி பணிகள் செய்து வரும் நிலையில் ஐந்து நலத்திட்டங்களையும் நிரந்தரமாக கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார்
அதே வேலையில் மாநிலத்தில் பல இடங்களில் எம்எல்ஏக்கள் வீடுகளில் இடி ரெய்டு நடத்துவது குறித்து கேட்டதற்கு இடி ரைட்டு நடத்தினால் அதற்கு எம்எல்ஏக்கள் என்ன சோதனை வேண்டுமானாலும் நடத்தட்டும் எனக் கூறியுள்ளனர் ஆனால் எம்எல்ஏக்கள் யாரும் அதற்கு பயப்படுவது கிடையாது மத்திய அரசு பல்வேறு துறைகளை கைக்குள் வைத்துக் கொண்டு அதை உபயோகப்படுத்தி எதிர்க்கட்சிக்காரர்களை பலி வாங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்
இதே வேளையில் மருத்தவ கல்லூரி மருத்துவமனையில் குடிதண்ணீர் தட்டுப்பாடு இருப்பது குறித்து கேட்டதற்கு மருத்துவக் கல்லூரியில் குடிதண்ணீர் தட்டுப்பாடு உள்ளது தெரிய வந்ததை அடுத்து மூன்றரை கோடி ரூபாய் செலவில் மழை தண்ணீரை சுத்திகரிப்பு செய்து அதை பயன்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார் அவருடன் தலைமை மருத்துவர் மோகன் மற்றும் சிக்கமகளூர் தொகுதி எம்எல்ஏ தம்மையா மற்றும் பலர் இருந்தனர்



