Jayalalitha’s death inquiry report tabled in Legislative Assembly today: ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல்

சென்னை: Jayalalitha’s death inquiry report tabled in Legislative Assembly today. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, சட்டப்பேரவையில் இன்று தாக்கலாகிறது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வந்தது.

இதனைத்தொடர்ந்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் 3 பக்க அறிக்கையை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அளித்துள்ளனர். அந்த அறிக்கையில் கடந்த டிசம்பர் 5ம் தேதி உரிய மருத்துவ நடைமுறைகள் படியே அனைத்தும் சிகிச்சைகளும் கடைபிடிக்கப்பட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள் உடலை பரிசோதித்து மூளை மற்றும் இதயம் செயலிழந்தது என்பதை உறுதி செய்து டிசம்பர் 5 ம் தேதி 11.30 மணிக்கு ஜெயலலிதா உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

எனவே மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்விதமான தவறுகளும் இல்லை என்றும் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் கட்டுப்படுத்த முடியாத அளவிலான நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார் என்றும், பாக்டீரியா ரத்தத்தில் பரவி இருந்ததும், இது போல உயர் ரத்த அழுத்தம் போன்ற பல பிரச்சினைகள் காரணமாக உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சென்னை தலைமை செயலகத்தில் இன்று (27.08.2022) முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.ஆறுமுகசாமி சந்தித்து விசாரணை ஆணையத்தின் அறிக்கையை வழங்கினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கடந்த 5.12.2016 அன்று காலமானது குறித்து விசாரிப்பதற்காக கடந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 25.09.2017 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ. ஆறுமுகசாமி அவர்கள் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையத்தின் கால வரம்பு 24.08.2022 அன்று முடிவுற்ற நிலையில், கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி தமிழக முதல்வரிடம் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கையை வழங்கினார்.

இந்த நிலையில் தமிழ்நாடு 2ம் நாள் சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, இந்தி எதிர்ப்பு தீர்மானம், அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கையும் இன்று தாக்கலாகிறது.