Jayalalitha : ஜெயலலிதாவின் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை

Jayalalitha : மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக தலைமை அலுவலகம் விழா கோலம் பூண்டுள்ளது. தொண்டர்கள் புடை சூழ, அலுவலகம் வண்ண மலர்களாலும், தோரணங்களாலும் அலங்கரித்து வைக்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலைக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளையொட்டி, அதிமுக அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மறைந்த தமிழக முதலமைச்சரும், அதிமுக முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், அவரது பிறந்த நாளையொட்டி அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள தன்னுடைய இல்லத்தில் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் நிகழ்வில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கட்சி அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து எம்.ஜி.ஆர். சிலைக்கும் மாலை அணிவித்தார். இதனை தொடர்ந்து, ஜெயலலிதா பிறந்த நாள் மலரை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி அங்கு கூடியிருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

must read : தஜிகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ; ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவு

must read : Highway Tender Scam : எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு : நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம்

must Read : Rohini IAS Vs Roopa IPS : ரோகிணி சிந்தூரி ஐஏஎஸ், டி.ரூபா ஐபிஎஸ் ட்ரான்ஸ்பர்; கர்நாடக அரசு அதிரடி

Jayalalitha 75th Birthday Palaniswami Tributes Tamilnadu Ex CM