International Millet Year: திருச்சி என்ஐஐடியில் சர்வதேச தினைப்பயிர் ஆண்டு அனுசரிப்பு

திருச்சி: The International Millet Year was observed at the National Institute of Technology (NIIT), Trichy. திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்ஐஐடி) சர்வதேச தினைப்பயிர் ஆண்டு அனுசரிக்கப்பட்டது.

ஓர் ஆண்டு கால கொண்டாட்ட நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, சிறப்பு விருந்தினர் உரை மற்றும் தினைப்பயிர் தொடர்பான வினாடி வினா போட்டி, நடந்தேறியது. இதில் என்ஐஐடி மற்றும் நகரில் உள்ள மற்ற கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வைத் தொடங்கி வைத்து பேசிய என்ஐடிடி இயக்குநர் டாக்டர் ஜி.அகிலா, தினைப்பயிர்களின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் சர்வதேச தினைப்பயிர் ஆண்டு கொண்டாட்டங்கள் மூலம் துறை சார்ந்தவர்கள் மத்தியில் விழிப்புணர்வு எவ்விதம் அதிகாரிக்கும் என்பதை வலியுறித்தினார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் தஞ்சாவூரில் உள்ள அன்னை பாரதி யோகா சிகிச்சை மற்றும் யோகா கிளினிக்கின் நிறுவனர் மற்றும் முதன்மை மருத்துவர் டாக்டர் கலைமகள் ரவி, “குடல் மற்றும் மூளைக்கு தினை” என்ற தலைப்பில் பேசினார்.

மேலும் அவர் பல்வேறு வகையான தினைப்பயிரின் ஊட்டச்சத்து மற்றும் அதன் பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார்.

கனிமங்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் புரதங்களின் வளமான ஆதாரம் போன்றவைகள் தினைப்பயிரின் பயன்பாடு மூலம் கிடைக்கும் என்றும் மூளை, எலும்பு மற்றும் தசை வளர்ச்சியில் தினைப்பயிர்களின் பங்கு மிக முக்கியமானது. நமது ஆரோக்கியத்தைப் பேணி, பல நோய்களில் இருந்து நம்மை காப்பதில் தினைப்பயிர் முக்கிய பங்கு ஆற்றுகிறது என அவர் பேசினார்.

வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. டாக்டர் எஸ். முத்துக்குமரன், டீன், ஆராய்ச்சி மற்றும் ஆலோசகர் மற்றும் டாக்டர் என். தாமரைச்செல்வன், பதிவாளர் (பொறுப்பு) உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.